Home பெண்கள் தாய்மை நலம் பிரசவக் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தர்மசங்கடங்கள்

பிரசவக் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தர்மசங்கடங்கள்

10

d13e0c1a-901a-4e76-9db1-92ed320d998b_S_secvpfபெண்களுக்கு பிரசவக் காலத்தில் சில தர்மசங்கடமான விஷயங்கள் நடக்கும். ஹார்மோன் செயல்பாடுகள் பிரசவக் காலத்தின் போது அதிமாக, வேகமாக இருக்கும். இதனால், உடலில் சில செயல்பாடுகள் வேகமாகவும், சில செயல்பாடுகள் திறன் குறைவாகவும் நடக்கின்றன. பெரும்பாலான பெண்கள் சிறுநீர் கசிவது போல உணர்வது உண்டு.

ஓர் பெண் கருத்தரிக்கும் போது, அவரது இடுப்பு பகுதி தசைகள் வலுவிழக்கிறது, இதன் காரணத்தினால் சிறுநீர் கசிவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. தும்மல், இருமல் ஏற்படும் போது கூட சிறுநீர் கசிவு ஏற்படலாம். இது பிரசவிக்கும் வரை இருக்கும். கர்ப்ப காலத்தில் 80% பெண்களுக்கு மலம் கழித்தலில் பிரச்சனை ஏற்படுகிறது. இரண்டாவது, மற்றும் மூன்றாவது மூன்று மாத சுழற்சியில் குடல் இயக்கம் கொஞ்சம் திறன் குறைவாக நடக்கும்.

இதனால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தின் மூன்றாவது மூன்று மாத சுழற்சியில் புணர்புழை வெளியேற்றம் (Vaginal Discharge) ஏற்படும். மிகவும் முடியாமல் கருதுவோர் மருத்துவரிடம் பரிசோதித்து அதற்கேற்ப நடந்துக் கொள்வது சரியானது. மிகவும் தர்மசங்கடமான விஷயங்களில் இதுவும் ஒன்று. குடல் இயக்கத்தின் திறன் குறைபாடினால், வாயுத்தொல்லை ஏற்படும்.

செரிமானம் சரியாக நடக்காமல் இருப்பது தான் இதற்கான காரணம் ஆகும். எனவே, இந்த நேரத்தில் வாயு அதிகமான உணவுகளை சாப்பிட வேண்டாம். குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக உடல் எடை அம்மாக்களுக்கு அதிகரிக்கும். இது இயற்கையான ஒன்று. இதன் பிறகு நீங்கள் சரியான டயட்டில் இருந்தால், சில மாதங்களில் மீண்டும் நீங்கள் பழைய நிலைக்கு வந்துவிடலாம்.