Home ஜல்சா பாலியல் விளையாட்டால் நடந்த விபரீதம்… அந்தரங்க உறுப்பை துண்டித்த இளம் பெண்…!!

பாலியல் விளையாட்டால் நடந்த விபரீதம்… அந்தரங்க உறுப்பை துண்டித்த இளம் பெண்…!!

31

ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ரு­வர், நபர் ஒரு­வரின் ஆணு­றுப்பை வெட்டித் துண்­டித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். ஆனால், பாலியல் விளை­யாட்­டொன்றே இந்த விப­ரீ­தத்­துக்கு கார­ண­மா­கி­ய­தாக ஆணு­றுப்புத் துண்­டிக்­கப்­பட்ட நபர் கூறு­கிறார்.

40 வய­தான இசைக்­க­லை­ஞ­ரான சேர்­ஜியோ என்­பவர் உறங்கிக் கொண்­டி­ருந்த நிலையில், அவரின் அந்­த­ரங்க உறுப்­பை பிரெண்டா பராட்­டினி எனும் 26 வய­தான யுவதி வெட்­டி­ய­தாக முன்னர் தகவல் வெளி­யா­கி­யி­ருந்­தது.

ஆர்­ஜென்­டீ­னாவின் கோர்­டோபா நக­ரி­லுள்ள பிரெண்டா பராட்­டி­னியின் வீட்டில் கடந்த வாரம் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

எனினும், சேர்­ஜி­யோவும் பிரெண்டா பராட்­டி­னியும் பாலியல் விளையாட்­டு­களில் ஈடு­பட்­டி­ருந்­த­போதே தவ­று­த­லாக இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக சேர்­ஜி­யோவின் சட்­டத்­த­ரணி நேற்­று­முன்­தினம் நீதி­மன்றில் வாதா­டு­கையில் கூறினார்.

அவ்­வே­ளையில் மேற்­படி இரு­வரின் கண்­களும் கட்­டப்­பட்­டி­ருந்­த­தா­கவும் சட்­டத்­த­ரணி தெரி­வித்தார். ஆனால், பாலியல் வன்­மு­றை­யி­லி­ருந்து தன்னை தற்­காத்­துக்­கொள்­வ­தற்­கா­கவே தான் இவ்­வாறு செய்­த­தாக பிரெண்டா பராட்­டினி தெரி­வித்­துள்ளார்.

தனது வீட்­டுக்குள் சேர்­ஜி­யோவை அனு­ம­தித்­தி­ருந்த நிலையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. சேர்­ஜி­யோவும் பிரெண்­டாவும் ஏற்­கெ­னவே அறி­மு­க­மா­ன­வர்கள், ஆனால், அவர்­க­ளுக்­கி­டையில் காதல் உறவு எதுவும் இருந்ததா என்பது தெரியவில்லை.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரெண்டா பிராட்டினி உளவியல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.