Home சமையல் குறிப்புகள் பாசிப்பருப்பு வெஜிடபிள் தோசை

பாசிப்பருப்பு வெஜிடபிள் தோசை

8

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு -2 கப்,
கோதுமை ரவை -1கப்,
பச்சை மிளகாய் 3,
காய்ந்த மிளகாய் – 4,
சீரகம் – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி – 1 கப் (சேர்த்து),
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3,
துருவிய சீஸ் சிறிதளவு, கடுகு, சீரகம் தாளிப்பதற்கு,

செய்முறை :

• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• நன்கு வதங்கியதும், அதில் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். ( தண்ணீர் சேர்க்க வேண்டாம். காய்கள் நன்கு வெந்ததும், அதில் உப்பு, துருவிய சீஸ் சேர்த்துக் கிளறி தனியாக வைக்கவும்.

• பாசிப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, அதோடு, சீரகம், மிளகாய் சேர்த்து நன்கு மிருதுவாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

• அதில் கோதுமை ரவையைக் கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோசையாக ஊற்றவும்.

• தோசை மாவு ஊற்றியதும், அதன் மேல் தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து அதன் மேல் மூடி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.