Home சமையல் குறிப்புகள் பசலைக்கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி

பசலைக்கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி

27

D0FE4C7B-5693-4FC1-99D8-4FE658017418_L_styvpfதேவையான பொருட்கள் :

பசலைக்கீரை – 2 கப்
முட்டை வெள்ளைக்கரு – 4
ப.மிளகாய் – 1
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு

செய்முறை :

* ப.மிளகாய், வெங்காயம், பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் சிறிது வதங்கியதும் பசலைக்கீரையைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* கீரை வெந்ததும் உப்பு சேர்த்து கிளறிய பின்பு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கிளறவும்.

* முட்டையும், கீரையும் உதிரியாக வந்தவுடன் கடைசியாக மிளகுத் தூள் தூவி பிரட்டி இறக்கினால், பசலைக்கீரை முட்டை பொரியல் ரெடி!!!

* இந்த முட்டை பொரியலை எந்த கீரையை கொண்டும் செய்யலாம். முருங்கைக்கீரையில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.