Home சமையல் குறிப்புகள் நீர்சத்து நிறைந்த பூசணிக்காய் சப்பாத்தி

நீர்சத்து நிறைந்த பூசணிக்காய் சப்பாத்தி

22

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் – 1 துண்டு
கோதுமை மாவு – 3 கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• பூசணிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்

• முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய பூசணியை சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.

• பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வதக்கிய பூசணிக்காய் துருவல் சேர்த்து, நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

• பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், பூசணிக்காய் சப்பாத்தி ரெடி!!!