Home பெண்கள் அழகு குறிப்பு தொடை இடுக்குகளில் இருக்கும் கருமையை எப்படி போக்கலாம்?…

தொடை இடுக்குகளில் இருக்கும் கருமையை எப்படி போக்கலாம்?…

22

சூரியஒளி நம்முடைய சருமத்தைக் கருமையாக்குவதை விட, சூரியஒளி படாத சில இடங்கள் அதிகமாக கருப்பாக இருக்கும். குறிப்பாக, அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளுக்கு அருகிலும் அவ்வாறு இருக்கும். அவற்றை எப்படி மாற்றுவது?

குறிப்பாக, பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் அதிகமாக கருமை ஏற்படும். இதற்குக் காரணம் அப்பகுதிகளில் காற்றோட்டம் குறைவாக இருப்பதால் வேர்வை வெளியே முடியாமல் தேங்குவது தான்.

இறந்த செல்கள் வெளியேற முடியாமல் இருப்பதால் தான் அந்த இடங்கள் அதிக கருமையடைகின்றன. அவற்றை எப்படித்தான் சரிசெய்வது? அதற்கும் சூப்பர் வழிகள் இருக்கு…

2 ஸ்பூன் எலுமிச்சை சாறினை எடுத்துக்கொண்டு அதனுடன் 10 துளிகள் ரோஸ்வாட்டர் கலந்து காட்டனைப் பயன்படுத்தி, அந்த கருமையான இடங்களில் தடவ வேண்டும்.

ஒருவேளை எலுமிச்சையால் அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல் ஏதேனும் ஏற்பட்டால் கழுவிய பின்பு தேங்காய் எண்ணெய் தடவலாம்.

இதை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்துவந்தால் மிக விரைவில் பலன் கிடைக்கும்.

2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அந்தரங்கப் பகுதியைச் சுற்றி தடவி, பின் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்துக் கழுவ வேண்டும்.

ஒரு டேபிள் ஸ்பூன் அரிசிமாவு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் சிறிது ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.

இந்த கலவையை கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, நன்கு தேய்த்து, மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

ஒரு ஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் ஆரஞ்சுத்தோல் பவுடருடன் சேர்த்து சிறிது ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி அந்த இடங்களில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

முட்டையின் வெள்ளைக்கருவை அந்தரங்கப் பகுதிகளில் கருமை உள்ள இடங்களில் தடவி, நன்கு உலர்ந்ததும் மென்மையான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் அந்த பகுதிகளில் கருமை உண்டாவதைத் தவிர்க்க முடியும்.