Home உறவு-காதல் திருமணத்தை தவிர்க்கும் இன்றைய பெண்கள்

திருமணத்தை தவிர்க்கும் இன்றைய பெண்கள்

20

4003691b-a2b0-40d0-b08f-36bf5048b925_S_secvpfதிருமணத்தை தவிர்க்கும் இன்றைய பெண்கள்
திருமணத்தை தள்ளிப்போடும் பெண்கள் சமீப காலங்களில் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள். படிப்பதையும், வேலை பார்ப்பதையும் அந்தந்த பருவத்தில் செய்யும் அவர்கள், திருமணத்தை மட்டும் அதற்குரிய பருவத்தில் செய்து கொள்ள மறுக்கிறார்கள்.
படித்து, வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை ஓட்டும் அவர்கள் திருமணம் செய்து கொண்டால் தங்கள் சுதந்திரம் பறிபோய் விடும் என்று கூறுகிறார்கள். எங்களை பெற்றோர் முழுமையாக கவனித்து கொள்கிறார்கள். நாங்கள் இளவரசி போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மகராணி ஆகும் ஆசையில் திருமணம் செய்து கொண்டு மனஉளைச்சல் உடைய நாங்கள் தயாரில்லை என்கிறார்கள். திருமணத்தை தள்ளிப்போடும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, இல்லையோ – அந்த பெண்களின் பெற்றோர் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். நம் நாட்டில் 60 சதவீத பெற்றோர் தங்கள் மகளின் திருமணத்தை பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் இந்த சதவீதம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 28 வயதிற்குள் பெண்களுக்கு திருமணம் நடந்து விடவேண்டும். 30 வயதை கடந்து விட்டால் திருமணம் கேள்விக்குறியாகிவிடும். ஆனால் 35 வயதை கடந்த பின்பு கூட திருமணத்தை பற்றி யோசிக்காத பெண்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் சில நேரங்களில் சுமையாகிவிடுகிறார்கள். திருமணத்தை பெண்கள் தள்ளிப்போடுவதற்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். நிரந்தரமாக உடல் நலம் சரியில்லை. மனநிலை சரியில்லை. கடுமையான நோய்களின் பாதிப்பு போன்ற காரணங்கள் இருந்தால் பரவாயில்லை.
ஆனால் சுதந்திரம் போய்விடும். மகிழ்ச்சி பறிபோய்விடும். மற்றவர்களளோடு அனுசரித்து வாழும் பக்குவம் தனக்கு இல்லை என்பது போன்ற காரணங்களை சொல்லும்போது அது கேலிக்கூத்தாகிவிடுகிறது. கல்வி, சம்பாத்தியம் எல்லாமுமே எதிர்காலத்திற்கான அஸ்திவாரம். திருமணம் தான் பெண்களின் வாழ்க்கையில் திருப்பம்.
இளமையும், அழகும் இருக்கும் பருவத்தில் திருமணம் செய்து கொண்டால் தான் வாழ்க்கையை ருசிக்க முடியும். அப்போது பலரும் தேடிவந்து பெண் கேட்பார்கள். அப்போது பார்க்கலாம்.. பார்க்கலாம்.. என்று பதில் சொல்லிக்கொண்டே இருந்தால் பார்க்க வந்த ஆண்கள் ஒவ்வொருவரும் வேறு பெண்களை திருமணம் செய்தபடி வாழ்க்கையில் செட்டில் ஆகிக்கொண்டே இருப்பார்கள்.
கடைசியில் தனிமை வாட்டும். அப்போது ஞானோதயம் வரும். திருமணம் செய்து கொள்ளலாம். என்று நினைப்பார்கள். அதற்குள் வாலிபம் கடந்துபோயிருக்கும். அப்போது தேடுதல் வேட்டை நடத்தினாலும் இளைஞர்கள், திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள். பெண்கள் பருவத்தில் இருக்கும்போது தன்னை பார்க்க வரும் வரன்களுக்கு நிபத்தனை விதிப்பார்கள்.
அவர்களே முதிர்கன்னியாக ஆன பின்பு அந்த பெண்களை மணக்க விரும்பும் ஆண்கள் நிபந்தனை விதிக்க தொடங்கிவிடுவார்கள். இப்படி கல்யாண மார்க்கெட்டில் ஓரங்கட்டப்பட்ட பெண்கள் ஏராளம் உண்டு. இன்று பெண்களின் கையில் பணம், அழகு, வேலை, கவுரவம் போன்றவை இருக்கலாம்.
அதையே நினைத்து கொண்டு அவர்கள் எதிர்காலத்தை முடிவு செய்துவிடக்கூடாது. அவை அனைத்தும் நிரந்தரமானவை அல்ல. காலப்போக்கில் ஒவ்வொன்றாய் கழன்று போய்விடும். இளம் வயதில் அளவுக்கு மீறிய வசதிகளுடன் வாழும் பெண்களின் கண்களை கர்வம் மறைந்து விடுகிறது.
இன்றைய பெண்களுக்கு நாளைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கணிக்கத் தெரியவில்லை. தனிமையாக, தனியாக அவ்வளவு நீண்ட பணயத்தை மேற்கொள்ள முடியாது. வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தனிமை ஒரு சாபமாகவும், மரணத்தைவிட கொடியதாகவும் தெரியும்.
பருவத்தை கடந்தும் திருமணத்தை தள்ளிப்போடும் ஒவ்வொருவரும், எதிர்காலத்தில் தனிமையை சந்திக்க விருப்பமனு போட்டவர்களாகத்தான் இருப்பார்கள்.