Home பெண்கள் உடல் கட்டுப்பாடு திருமணத்திற்கு பிறகு ஆண்களின் உடல் எடை அதிகரிக்க காரணங்கள்

திருமணத்திற்கு பிறகு ஆண்களின் உடல் எடை அதிகரிக்க காரணங்கள்

21

age_0-350x250கடைபிடித்து வந்த கொஞ்ச டயட் மற்றும் உடற்பயிற்சியையும் திருமணத்திற்கு பிறகு மறந்துவிடுவோம்.

இதற்கு காரணம் கல்யாணம் ஆக புதிதில் ஏற்படும் சந்தோஷம். விருந்துகளுக்கு செல்வதால் நேரம் கிடைக்காமை.

திருமணம் நிச்சயமான பிறகு ஜிம்மிற்கு சேரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆனால், திருமணமான பிறகு இவர்கள்

அப்படியே நின்றுவிடுவார்கள். பல ஆண்கள் தங்களது திருமண ஆல்பத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் உடல்

எடையில் கொஞ்சம் கரிசனமான அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு உடல் எடை பற்றி ஆண்கள் எந்த

கவலையும் கொள்வதில்லை.

பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு டயட்டை ஆண்கள் கடைபிடிப்பதில்லை. திருமணம் முடிந்தவுடன் பல விருந்துகள், மனைவியின்

கையால் சமைத்த சாப்பாடு என டயட் என்றால் என்ன என்பதை மறப்பது தான், திருமணத்திற்கு பிறகு திடீரென உடல் எடை அதிகரிக்க

காரணமாக இருக்கிறது.

மனைவியிடம் இருந்து வெளிவரும் அந்த ஆரம்பக்கட்ட அன்பில் திளைத்து, பூரித்து போய். அவர்கள் அதிகமாக எதை வைத்தாலும்

வயிற்றில் அடுக்கிக் கொள்ளும் தன்மை ஆண்களுக்கு வந்துவிடுகிறது.

காலையில் நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்த ஆண்கள் கூட, திருமணத்திற்கு பிறகு அதை சிறிது காலத்திற்கு மறந்துவிடுகிறார்கள்.

– உடல் பருமன், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை தான் நீரிழிவு, இதய பாதிப்புகள் போன்றவை அதிகம் ஏற்பட காரணமாக

இருக்கிறது. எனவே, முடிந்த வரை டயட், உடற்பயிச்சி, சரியான நேரத்திற்கு தூக்கத்தை கடைபிடிக்க மறந்துவிட வேண்டாம்.