Home சமையல் குறிப்புகள் தினை உருளைக்கிழங்கு கட்லெட்

தினை உருளைக்கிழங்கு கட்லெட்

13

27d1e224-83bb-441c-8448-f782ce84f675_S_secvpfதேவையான பொருட்கள் :

தினை – 1 கப்
வேகவைத்த பிசைந்த உருளைக்கிழங்கு – அரை கப்
கொத்தமல்லி தழை நறுக்கியது – 1 கப்
சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
ரொட்டி தூள் – அரை கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• தினையை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

• அதனுடன் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு, உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தழை போன்ற அனைத்தையும் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

• பிசைந்த மாவை எலுமிச்சை அளவில் உருட்டி அதனை சிறு வடையாக தட்டி ரொட்டி தூளில் போட்டு பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி வேக எடுக்கவும்.

• சுவையான சத்தான தினை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.