Home உறவு-காதல் தினமும் மனைவியுடன் சண்டைபோடும் கணவனும்! அதனால் அவனது இல்ல‍ம் சந்திக்கும் இன்ன‍ல்களும்!

தினமும் மனைவியுடன் சண்டைபோடும் கணவனும்! அதனால் அவனது இல்ல‍ம் சந்திக்கும் இன்ன‍ல்களும்!

12

fight-564813bdefb72_exlstசிலவீட்டில் ஆண்களுக்கு வெளிஇடங்களில், ஊர்பெயர் தெரியாதவர்கள், அலுவலகத்தில் புதியதாய் வேலைக்குசேர்ந்தவர்கள் என யார் அறிவுரை கூறினாலும்,
ஆடு மண்டையை ஆட்டுவதுபோல ஆட்டி விட்டு வந்து விடுவார்கள். ஆனால், வீட்டில் தாலிக் கட்டிய மனைவி ஓரிரு வார்த்தைகள் உபதேசம் செய்துவிட்டால் வருமே கோவம் விண்ணை பிளந்து கொண்டு, அன்றைய நாள் அடுப்பில் நெருப்பு எரியாது, உடல் முழுக்க தான் எரியும் கோவத்தின் பிழம்பாக. ஏன் மனைவி என்பவள் அவ்வளவுகூட உரிமை இல்லாதவ ளா என்ன?

தினமும் கட்டிய மனைவியுடன் சண்டையிடும் ஆண்களும் சிலர் இருக்கிறார்கள். பகலில் சண் டையிட்டுக் கொண்டு இரவில் இவர்கள் அன்யோ ன்யமாக பழகலாம்.ஆனால், வீட்டில் உள்ளவ குழந்தைகள் அப்பா அம்மா தினமும் சண்டையி ட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என மன வருத்த ம் அடைந்து படிப்பில் இருந்து கவனம் சிதற ஆரம்பித்துவிடுவார்கள்….
அலுவலக வேலைகளும் கெடும்
தினமும் மனைவியுடன் சண்டைபோடுவதால், உங்கள் வாழ்க்கையில் பெரிதும் பாதிப்படைவது அலுவலக / தொழில் வேலைகள் தான். சிலருக்கு யார் அறிவுரை கூறினாலும் கோவம் வராது. ஆனால், மனைவி ஒரு வார்த்தை கூறிவிட்டால் கூட கோவம் இமயத்தை எட்டும் அளவு வரும். இதை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்
பகலில் குழந்தைகள் முன்பு சண்டையிட்டுக் கொண்டு நீங் கள், இரவில் உங்கள் மனைவியிடம் பரஸ்பரம் கொண்டா டலாம். ஆனால், இது உங்க ள் குழந்தைக்கு தெரியுமா? அவர்களை பொறுத்த வரை அம்மா, அப்பா சண்டையிட்டு கொண்டார்கள் என்பது மட்டுமே மனதில் நிற்கும். இதனா ல், அவர்கள் மனதளவில் பெரியதாய் பாதிக்கப்படுவர்.
உற்பத்தி திறன் குறைபாடு

அலுவலக வேலைகள் கெடுவதால், தன்னைப்போல உற்பத் தி திறனும் குறைய ஆரம்பிக்கும். ஆனால், இதற்கு காரணமு ம் மனைவி தான் என்று மீண்டும், மீண்டும் சண்டையிடுவது அடி முட்டாள் தனம். எனவே, இதை முழுவதாய் மாற்றிக் கொள்ளுங்கள்.
மன அழுத்தம்
மேலும், காலையிலேயே சண்டையிடுவது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். இதனால், வீண் உடல் நல பிரச்சனைகள் தான் ஆரம்பிக்கும். உறவில் மட்டும் இன்றி, உடல்நலத்திலும் விரிசல் அதிகமாக ஆரம்பிக்கு ம்.
உறவில் விரிசல்
உறவில்விரிசல் என்பது உங்களது தாம்பத்தியவாழ்க்கையில் மட்டுமல்ல, அப்பா மகன், மகள் என்ற உறவிலும் விரிசல் விழும். ஆகவே, மனைவியுடன் சண்டையிடுவதை நிறுத்துங் கள்…. முடிந்த வரை குறைத்துக் கொள்ளு ங்கள். தெரிந்தும் வார்த்தைகள் பிரயோகம் செய்வது ஆபாசவார்த்தைகள் பயன்படுத்தி திட்டுவது. சிலருக்கு அவர்கள் மனைவி அப்படி தான் என்று தெரியும், என்ன செய்தால் அவர்கள் எப்படி எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும்தெரியும். எல்லாம் தெரிந்தும்வேண்டுமென்றே அவ ர்களை வம்புக்கு இழுத்து சண்டை இடுவார்கள். இவை அனைத்தும் ஆரோக்கியமான உறவிற்கு உகந்ததல்ல.
வீண் அவப்பெயர்
உங்கள் மனைவியுடன் சண்டையிட்டு வெற்றிப்பெறுவது என்பது வீர செயலல்ல. இது உங்களுக்கு அலுவலகம், அக்கம், பக்கத்தினர் மத்தியில் அவப்பெயரை தான் வாங்கி தரும். ஒன்றும் குறைந்து விட போவதில்லை அலுவலகம், வெளியிடங்கள், பொது இடங்களில் ஊர், பெயர்தெரியாத நபரி டம் எல்லாம் விட்டுக் கொடுத்து போகும் நீங்க ள், உங்கள மனைவியிடம் விட்டுக் கொடுத்து போவதில் ஒன்றும் குறைந்துவிட போவதில்லை. மேலும், இது உங்கள் இல்வாழ்க்கை சிறக்க உதவும்.