Home சூடான செய்திகள் தினமும் நைட் ரொமான்ஸ் அதிகமாகணுமா?… அப்போ மொதல்ல இத பண்ணுங்க…

தினமும் நைட் ரொமான்ஸ் அதிகமாகணுமா?… அப்போ மொதல்ல இத பண்ணுங்க…

28

டென்ஷன், மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்க யோகா, தியானம், கவுன்சிலிங் என அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், மனதுக்குப் பிடித்தவர்களைக் கட்டிப்பிடித்தாலே உங்கள் டென்ஷன் அத்தனையும் காணாமல் போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கட்டிப்பிடித்தலையும் அதில் கிடைக்கிற சுகத்தையும் விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அது தான் உடலுறவின் என்னும் பந்தியில் ஸ்டார்ட்டராக இருக்கிறது.

அது வெறும் உடல் சுகத்தை மட்டும் தருவதில்லை. கட்டிப்பிடிப்பதால், உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளும் தீர்க்கப்படுகின்றன. கட்டிப்பிடிப்பதால், நம்முடைய உடலில் ஆக்சிடோசின் ஹார்மோன் சுரப்பது அதிகமாகிறது. இது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஹார்மோன்களில் ஒன்று.

கட்டிப்பிடிப்பதால் உறவுகளின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். சின்னதாக ஒரு கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் வீட்டுக்கு வந்ததும், வெகுநாட்கள் கழித்து, உங்கள் வாழ்க்கைத் துணையைத் தொடர்ந்து பத்து நிமிடம் கட்டிப் பிடித்தபடி இருக்கிறீர்கள்.

அந்த அனுபவத்தை உங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாதல்லவா? ஆனால், வேலைப்பளு, வெகுநாட்களாக இருந்த டென்ஷன் அத்தனையும் உங்கள் கண்ணுக்கு முன்னால் உங்களை விட்டு காற்றில் பறந்து போவதை உங்களால் பார்க்க முடியும் அல்லவா?

கட்டிலில் இணையும் போது மனம் லேசாக இருந்தால் மட்டுமே அந்த உறவு சுகமானதாக இருக்கும். அதனால் எடுத்தவுடன் கட்டிலில் கவிழ்த்து, சட்டென முடித்துவிடாமல் குறைந்தது ஒரு 20 நிமிடங்களாவது இருவரும் கட்டிப்பிடித்தபடி இருங்கள்.

கட்டிப்பிடிப்பது சருமத்தில் பளபளப்பை ஏற்படுத்தும் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. கட்டிப்பிடிக்கும் போது, உடலின் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, ஒருவகை மின்சாரம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.

அது ரத்த ஓட்டத்தை வேகமாக்குவதால் சருமத்துக்கு சரியான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. அது உறவில் இன்னும் உங்களை அதிக ஈடுபாட்டுடன் இயங்கச் செய்யும்.

ஆக்சிடோசின் ஹார்மோன் உடலில் உண்டாகும் வலியைப் போக்கக்கூடியது. ஒருவர் எதிர் பாலினத்தை விருப்பத்துடன் தொட்டாலே ஆக்சிடோசின் சுரக்க ஆரம்பித்தவிடுமாம். கட்டிப்பிடிப்பதால் ஆக்சிடோசின் சுரப்பது மிக அதிகமாகும். பிறகென்ன…அய்யோ… பத்திக்கிச்சு தான்…

கட்டிப்பிடிப்பதால் உடலில் பல ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கின்றன. உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

கட்டிப்பிடிப்பதால், நீங்கள் எதிர்பார்க்கும் அன்பும் உங்களுக்குக் கிடைக்கிறது. அது உங்கள் மனதுக்கும் பாவிட்டிவ் எனர்ஜியைத் தருவதால், மன அழுத்தமும் டென்ஷனும் உங்களை நெருங்க யோசிக்கும்.