Home பெண்கள் தாய்மை நலம் தாய்மை அடைவதை தள்ளிப்போடுவது, ஆரோக்கியமா? அவஸ்தையா?

தாய்மை அடைவதை தள்ளிப்போடுவது, ஆரோக்கியமா? அவஸ்தையா?

15

குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் நாங்கள் ரொம்ப அவசரப்பட்டு விட்டோம். நிரந்தர வருமானம், வீடு, வாகனம் எல்லாம் வாங்கிய பின்புதான் நான் தாய்மை அடைந்திருக்க வேண்டும். சரியாக திட்டமிடாத தால் இப்படி நிகழ்ந்துவிட்டது! எங்கள் குழந்தை யை வளர்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கி றோம்’
– ‘நாங்கள் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துதான் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் இரு தரப்பு பெற்றோரும், ‘ஏன் இன்னும் தாய்மை அடைய வில் லை. உங்களில் யாருக்கு குறை! சொல்லுங்கள் ஆஸ்பத்திரிக்கு போக லாம்’ என்றெல்லாம் கேட்டார்கள். அப்படிப் பட்ட கேள்விகளை தவிர்ப்பத ற்காக நாங்களும் அவசரப்பட்டு விட்டோம்.
இப்போது என்னால் குழந்தையையும் கவனித்துக்கொண்டு, வேலைக்கும் செல்ல முடிவதில்லை’ .. என்றெல்லாம் ஒரு சாரா ர் சொல்லிக் கொண்டிருக்க, இன்னொரு சாரார், ‘நிதானமாக தாய்மை அடையலாம் என்று நினைத்து வருடக்கணக்கில் தள்ளிப் போட்டோம். இப்போது எங்களுக்கு தாய்மை அடைவ தில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.
தாய்மை அடையும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டிருக்கி றது’ என்றும் சொல்கிறார்கள். அப்படி யானால் திருமணமான தம்பதிகள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம்? அதற்கா க அவர்கள் எப்படி திட்டமிட வேண்டும்?
குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அந்தந்த தம்பதிகளின் மன, உடல், பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்த விஷயம். அடுத்த வர்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக அவசரமாக குழந்தையை பெற்றுக் கொள்வது சரியானதல்ல. திருமணத் திற்கு பிறகு தம்பதிகள் போடும் திட்டங்களில் மிகவும் நுட்பமானது, குழந்தை பெற்றுக்கொள்வதுதான்!
வீடு வாங்கவும், கார் வாங்கவும், வங் கியில் பணம் சேர்க்கவும் அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கும் தம்பதிகள், அதைவிட முக்கியமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷய த்தில் அதற்குரியவர்களிடம் ஆலோசனை பெறாமல் அதிரடியாக நடந்துகொள்கிறார்கள். அவசரமாக தாய்மை அடைந்து விடுகி றார்கள் அல்லது வருடக்கணக்கில் தள்ளி வைத்து பிற்காலத்தி ல் சிரமப்பட்டுப் போகிறார்கள்.
சரியான பருவத்தில் திருமணம் செய்து கொள்கிறவர்கள், தாய்மை அடையும் விஷயத்தில் அவசரம் காட்டவேண்டிய தில்லை. முதலில் அவர்கள் தங்கள் வருமானம், செலவு, சேமிப்பு போன்ற வற்றை பற்றி தெளிவாக மதிப்பீடு செய்ய வேண்டும். அவை களை மேம் படுத்த போதுமான காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு குழந்தை எப்போது தேவை என்று முடிவு செய்யவேண்டும்.
குழந்தை பெற்றுவிட்டால், அந்த குடும்பத்தில் பொறுப்புகள் அதி கரிக்கும். அந்த குழந்தையை பராமரிக்க பணமும், அவர்களது உடலில் அதிக சக்தியும் தேவை. கார் ஒன்றை கடனுக்கு வாங் குவதாக இருந்தால், மாதந் தோறும் அந்த கடனை செலுத்தும் அள வுக்கு பணம் இருந்தால் போதும். குழந்தை விஷயம் அப்படி அல்ல . அவ்வப்போது ஏற்படும் செலவுகளை சரிக்கட்ட எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
குழந்தை பிறப்பதற்கே ஒரு பெரிய தொகை செலவழிக்க வேண் டியிருக்கிறது. ‘ஏன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில் லை’ என்று கேட்டவர்கள் யாரும், தானே பிரசவ செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதில்லை. எவ்வளவு கஷ்டப் பட்டாலும் பிரசவ செலவை பெற்றோர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
முந்தைய காலத்தில் திருமணமான சில மாத ங்களிலே தாய்மை அடையாவிட்டால், வீட்டில் உள்ள பெரியவர்கள் நச்சரிப்பார்கள். ‘பேரக் குழந்தையை பார்த்தால்தான் கண்ணை மூடு வேன்’ என்றெல்லாம் கதைவிடுவார்கள். இப்போது யாராவது அவ்வாறு சொன்னால், ‘நாங்கள் குழந்தையை பெற்றதும் நீங்கள் கண்ணை மூடுவதாக சொல்கிறீர்களே, உங்களை சாகடிக்க நாங் கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா?’ என்று கேட்பார் கள்.
முன்பெல்லாம் திருமணம் என்றாலே அது வாரிசை உரு வாக்கத் தான் என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது. அதனா ல் ஒரு சில வருடங்களுக் குள் பெண் தாய்மை அடையாவிட்டால், மகனுக்கு இன்னொரு பெண்ணை மணமுடித்து வைக்க தயாராகி விடுவார்கள். சில பெண்கள் அதற்கு உடன்பட்டு, கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதித்து, தன்னை அந்த வீட்டு வேலைக்காரிபோல் மாற்றிக்கொள்வார்கள்.

சில ஆண்கள் இப்படி இரண்டாம் திருமணம் செய்துவிட்டு, ஜாலி யாக வாழ்க்கையை அனுபவிக்க, இரண்டாம் மனைவியும் கருத் தரிக்கமாட்டார். இறுதியில் பிரச்சினை யாரிடம் என்று பார்த்தால், அந்த ஆணே ஆண்மைக்குறைபாடு கொண்டவராக இருப்பார். இப்போது காலம் எவ்வளவோ மாறி விட்டது. அவரவர் பெற்றுக் கொள்வ தில் ஏற்படும் குழப்பங்கள்!
வாழ்க்கையை அவரவர் திட்டம் போட்டு வழிநடத்த பெரியவர்கள் அனுமதி அளிக்கிறார்கள். அதுவே ஆரோக்கியமான குடும்பத்தி ற்கு அழகு என்கிறார்கள். இன்று பெரும் பாலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்கும் போகிறார்கள். இரு வரும் சம்பாதிக்கும்போது இருவருக் கும் கருத்து சுதந்திரம் உருவாகிறது. எல்லா விஷயங்களையும் மனம் விட்டுப் பேசுவார்கள். சேர்ந்து முடிவெடு ப்பார்கள்.
அதனால் குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்திலும் அவர்கள் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்கிறார்கள். இன்று எங்கு பார்த் தாலும் தனிக்குடித்தனம்தான். அதனால் பெரும்பாலான வீடுகளி ல் குழந்தைகளை பராமரிக்க பெரியவர்கள் இல்லை. உதவிக்கு அனுபவப்பட்டவர்கள் இல்லாத தால், குழந்தை பெற்றுக் கொள் ளும் இளந்தாய்மார்கள் கைக் குழந்தைகளை பராமரிக்க மிகவும் தடுமாறிப்போகிறார்கள்.
அந்த தடுமாற்றத்திற்கு பயந்து, தாய்மையை தள்ளிப் போடுகிறார்கள். கைக்குழந்தைகளை பரா மரிப்பது பெரிய விஷயம். அத னால் பெண்கள் உடல் அளவிலும், மனதளவிலும் தாய்மைக்கு தயாராகாமல், அடுத்தவர்கள் கேள் வி கேட்கிறார்களே என்பத ற்காக குழந்தை பெற்று க்கொள்ளக் கூடாது.
குடும்பத்திற்கு வாரிசு என் பதோடு நின்று விடாமல் அதையும் தாண்டி இந்த சமூகத்தின் நல்ல பிரஜை என்ற அளவிலும் ஒரு குழந்தை வளர் க்கப்பட வேண்டும். அதில் பெற்றோ ரின் பங்கு மிக முக்கியம்.
அதனால் அவர்கள் தான் எப்போது தாய்மையடையவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். இதில் தேவையற்ற தலையீடுக ளோ, சுற்றியிருப்போரின் நிர்ப்பந்தங்களோ இருக்கக் கூடாது. சில தாய்மார்கள் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்கி றார்கள்.