Home பாலியல் தாம்பத்தியத்திற்கு இனி இவை தேவை இல்லை கட்டுப்பாடு இந்த ஜெல் யூஸ் பண்ணாலே போதும்!

தாம்பத்தியத்திற்கு இனி இவை தேவை இல்லை கட்டுப்பாடு இந்த ஜெல் யூஸ் பண்ணாலே போதும்!

247

தேவையற்ற கருவுறுதலை தடுக்க நாட்கள் எண்ணி உடலுறவில் ஈடுபடுதல், ஆணுறை பயன்படுத்துவது, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வது, சில கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது என பல வழிகள் கடைப்படிக்க படுகின்றன.

ஆனால், இவற்றுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பக்கவிளைவுகள் இருக்கின்றன. அனைத்து கருத்தடை வழிமுறைகளையும் அனைவரும் பின்பற்ற முடியாது. இதற்கு மாற்றாக இப்போது ஆண்களுக்கான கருத்தடை வழியாக ஆராய்ச்சியாளர்கள் புதிதாக ஜெல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

வேஸ்ஜெல் (Vasagel)
வேஸ்ஜெல் என்பது நச்சுத்தன்மை அற்ற, ஹார்மோனல் அற்ற (Non-Hormonal) ஜெல் ஆகும். இதை விதையில் இருந்து ஆணுக்குறி இடையே விந்து பயணிக்கும் குழாயில் இன்ஜெக்ட் செய்வார்கள். இதனால் விந்து வெளிப்படுதல் தவிர்க்கப்படும்.

முந்தைய ஆய்வுகள்!
இந்த ஜெல்லை ஏற்கனவே முயல்களை வைத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஜெல்லை எளிதாக கரைத்துவிட முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆய்வறிக்கை!
பேசிக்ஸ் அன்ட் கிளினிகல் அன்றோலாஜி எனும் ஆய்வு பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வு ஏற்கனவே ரீசஸ் எனும் குரங்கு வகை மத்தியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் இனப்பெருக்க காலத்தில் ஆய்வுக்குட்படுத்தி கருவுறுதல் ஆகவில்லை என்பதை அறிந்துள்ளனர்.

ஆண்களுக்கு ஏன்?
ஆண்களுக்கு இதுவரை குடும்பக்கட்டுபாடு சிகிச்சை மற்றும் ஆணுறை மட்டுமே கருவுறுதலை தடுக்க உதவும் வழிகளாக இருக்கின்றன. மேலும் இந்த வேஸ்ஜெல் முறை தேவையற்ற கருவுறுதலை நூறு சதவீதம் தடுக்க உதவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.

ஆண்மை குறைபாடு?
சில ஆராய்ச்சியாளர்கள் இது பின்னாட்களில் ஆண்களிடம் ஆண்மை குறைபாடு ஏற்பட காரணமாகிவிடுமோ என்ற அச்சம் தெரிவித்துள்ளனர்.

பக்கவிளைவுகள்!
விந்து வெளிவருவதை தடுப்பதால் எந்த மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதையும் அறிய வேண்டும். இதனால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதா என்பதையும் அறிய வேண்டும்.

எப்போது சந்தைக்கு வரும்?
இந்த ஆய்வுக்கு ஃபண்டிங் செய்த பர்செமுஸ் ஃபவுண்டேஷன் எனும் அரசு சாரா நிறுவனம் கூடிய விரைவில் இது சந்தைக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.