Home உறவு-காதல் தனக்கு வரப்போகும் மனைவி குறித்து கணவர்களின் கனவு : சுவாரசியமான ஆய்வு.

தனக்கு வரப்போகும் மனைவி குறித்து கணவர்களின் கனவு : சுவாரசியமான ஆய்வு.

14

ஜேர்மனில் தனக்கு வரப்போகும் மனைவி குறித்து கணவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து சுவாரசிய ஆய்வு நடந்தது.

ஜேர்மனியில் பிரபல நாளிதழனாது தங்களுக்கு வரப்போகும் மனைவி குறித்து எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தியது.

அதில் 45 சதவிகிதம் பேர் வேலைக்கு செல்லும் பெண்களே வேண்டும் என்றும் 76 சதவிகிதம் ஆண்கள் தங்களது மனைவி வேலைக்கு செல்லவேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் வேலைக்கு சென்றாலும், எங்களுக்கு குழந்தைகள் வேண்டும் எனவும் சில ஆண்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 92 சதவிகித பெண்களோ, திருமணமான ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் 42 சதவிகித பெண்கள் குழந்தைகளால் தங்களது வேலைகள் பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர் என்று புள்ளிவிபர அறிக்கை தெரிவித்துள்ளது.

இதேபோன்று கடந்த 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கு ஆண்கள் தங்களுக்கு வரப்போகும் மனைவியானவள் பண விடயத்தில் சுயரீதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.