Home சமையல் குறிப்புகள் டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிளகு தோசை

டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிளகு தோசை

20

தேவையான பொருட்கள்:
Capture
கோதுமை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மிளகு – 1 டீஸ்பூன் (பொடி செய்து கொள்ளவும்)
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை எண்ணெய் ஊற்றி தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.

* இப்போது சூப்பரான கோதுமை மிளகு தோசை ரெடி.