Home சமையல் குறிப்புகள் சைனீஸ் ப்ரைட் ரைஸ்

சைனீஸ் ப்ரைட் ரைஸ்

29

தேவையான பொருட்கள்


1 1/2 கப் சன்ரைஸ் வெள்ளை நீண்ட தானிய அரிசி
3 முட்டைகள்
2 தேக்கரண்டி எள் எண்ணெய்
3 தேக்கரண்டி கடலை எண்ணெய்
5 காய்ந்த சீன பன்றி இறைச்சி ஸாஸேஜஸ், மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் (ஒவ்வொன்றும் 30g அளவுடையதாக‌).
3 பச்சை வெங்காயம், மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
2 பல் நசுக்கிய பூண்டு
1 நீண்ட சிவப்பு மிளகாய், நன்கு நறுக்கி கொள்ளவும்
2 தேக்கரண்டி உப்பு குறைந்த சோயா சாஸ்
1 தேக்கரண்டி ஆயிஸ்டர் சாஸ்
1/2 கப் உறைந்த பட்டாணி,
பரிமாற 1 நீண்ட சிவப்பு மிளகாய், விதை நீக்கி நீள் வாக்கில் வெட்டிக்கொள்ளவும்
செய்முறை
செய்முறை 1
அரிசியை தண்ணீர் வடியும் வரை வேக வைத்துக்கொள்ளவும். ஒரு பேக்கிங் தட்டில் வரிசையாக பேக்கிங் காகிதத்தை வைக்கவும். இதன் மீது வேக வைத்த‌ அரிசியை தயாராக தட்டில் முழுவதும் பரப்பி வைக்கவும். இதை மூடி வைத்து குளிர்ந்த வெப்ப நிலையில் 3 மணி நேரம் வைக்கவும்
செய்முறை 2
ஒரு வாயகன்ற கெட்டியான கடாயை நன்கு சூடுபடுத்திக்கொண்டு, அதில் 1 டீஸ்பூன் வேர்க்கடலை எண்ணெய் சேர்க்கவும், இதை சுற்றி, முட்டை கலவையை சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை 1 நிமிடம் வேக வைக்கவும். பிறகு இந்த வெந்த கலவையை எடுத்து மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். இதே மாதிரி மீதமுள்ள முட்டை கலவையை வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து 2 முறை கொள்ளவும்.
செய்முறை 3
ஒரு வாயகன்ற கெட்டியான கடாயில், வெங்காயம் மற்றும் ஸாஸேஜை சேர்க்கவும். ஸாஸேஜ் பொன்னிறமாகும் வரை, 2 முதல் 2 நிமிடம் வரை கிளறவும். பிறகு பூண்டு மற்றும் மிளகாயை சேர்க்கவும். பச்சை வாசனை பொகும் வரை நன்கு கிளறவும். இதனுடன் அரிசி, சோயா சாஸ், ஆயிஸ்டர் சாஸ், உறைந்த பட்டாணி, மீதமுள்ள எள் எண்ணெய் சேர்க்கவும். 2 நிமிடங்கள் அல்லது நன்கு சூடாகும் வரை கிளறவும். கடைசியாக மிளகாயை மேலெ தூவி பறிமாறவும்..