Home சமையல் குறிப்புகள் சுவையான சத்தான பீட்ரூட் சாலட்

சுவையான சத்தான பீட்ரூட் சாலட்

21

Captureதேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 1
வெங்காயம் – 1
தேங்காய்த் துருவல் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு கப்பில் துருவி பீட்ரூட் துருவலை போட்டு அதில் வெங்காயம், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வேர்க்கடலை, பச்சை மிளகாயை தாளித்து பீட்ரூட் கலவையில் சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்கவும்.

* கடைசியாக தேங்காய்த் துருவலால் அலங்கரித்துப் பரிமாறவும்.

* சுவையான சத்தான பீட்ரூட் சாலட் ரெடி.

– இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.