Home சமையல் குறிப்புகள் சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி

சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி

19

Captureதேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 3
உருளைக்கிழங்கு – 2 பெரியது
கரம்மசாலாத்தூள்- சிறிதளவு

செய்முறை :

* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கைத் நன்றாக வேகவைத்து மசித்து அதனுடன் உப்பு, சீரகம், பச்சைமிளகாயை, கரம் மசாலாத்தூளைச் சேர்க்கவும்.

* கோதுமை மாவுடன் உருளைக்கிழங்கு மசாலாவைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் வைக்கவும்.

* மாவை சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான ஆலு சப்பாத்தி ரெடி.

* காரமும், மசாலாப் பொருட்களும் அவரவர் விருப்பத்திற்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.

* காரம் கூடி விட்டதென்றால் எலுமிச்சைச்சாறு அல்லது தயிர் சேர்க்க காரம் மட்டுப்படும்.