Home குழந்தை நலம் சிசேரியன் பிரசவ குழந்தைகள் என்ன ஆகிறார்கள் தெரியுமா?

சிசேரியன் பிரசவ குழந்தைகள் என்ன ஆகிறார்கள் தெரியுமா?

16

captureபிரசவத்தின் போது, குழந்தை பிறப்பதில் சிக்கல் உண்டானாலோ, குறிப்பிட்ட நாட்களைத் தாண்டி, குழந்தை பிறப்பது தள்ளிப் போனாலோ உடனடியாக, சிசேரியன் செய்து குழந்தையை எடுத்து விடுகிறோம். அப்படி செய்யும் போது, குழந்தையின் கவனமும் உணரும் திறனும் வேறுபடுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சுகப்பிரசவத்தால் பிறக்கும் குழந்தைகள் மிகவும் குறைந்து விட்டது. அதனால் உண்டாகும் வலிக்கு பயந்து, சிலர் வேண்டுமென்றே சிசேரியன் செய்து கொள்கிறார்கள்.

சுகப்பரசவத்தில் பிறந்த குழந்தைகளையும் சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளையும் வைத்து, ஆய்வு செயயப்பட்டது.

அந்த ஆய்வில், குழந்தைகளின் கண் அசைவுகள், கவனிக்கும் திறன் ஆகியவையும் ஆராயப்பட்டன. இரண்டு தரப்பு குழந்தைகளின் கண் இயக்கங்களும் வேறுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.

சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், கண்ணிமைக்கவும் , ஒரு பொருளின் மீதிருந்த தன்னுடைய கண்ணை திசை திருப்பவும் எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட சிசேரியன் குழந்தைகள் குறைந்த நேரத்தையே எடுத்துக் கொள்கின்றன. அவைகளால், ஒரு செயலன் மீது அதிக நேரம் கவனம் செலுத்த முடிவதில்லை எனத் தெரிய வந்தது.

இதனால் தான் சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட செயலில் அல்லது ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்க முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.