Home சமையல் குறிப்புகள் சிக்கன் பிரட்டல்

சிக்கன் பிரட்டல்

31

தேவையான பொருட்கள்
1.5கி கோழி தொடை 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
1 தேக்கரண்டி மஞ்சள்
12 பல் பூண்டு, நசுக்கியது
160 மிலி (2/3 கோப்பை) தாவர எண்ணெய்
8 சிறிய வெங்காயம், (6-ஐ மெல்லியதாக நறுக்குங்கள், 2-ஐ நன்றாக நறுக்குங்கள்)
3 செமீ துண்டு இஞ்சி, உரித்து நன்றாக துருவிக் கொள்ளவும்
4 தேக்கரண்டி கறிவேப்பிலை இலைகள், பரிமாற கொஞ்சம் எடுத்துக் கொள்ளவும்
3 இலவங்கப்பட்டை
10 ஏலக்காய் (குறிப்பு காண்க)
5 நட்சத்திர சோம்பு (குறிப்பு காண்க)
3 தேக்கரண்டி சீரகம்
2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் / சோம்பு
2 தேக்கரண்டி மிளகாய் தூள் (குறிப்பு காண்க)
2 தேக்கரண்டி கறி பொடி (குறிப்பு காண்க)
2 தேக்கரண்டி காற்சில்லு சர்க்கரை
2 தேக்கரண்டி சோயா சாஸ்
பரிமாறுவதற்கு சன் ரைஸ் பாஸ்மதி அரிசி,
வெள்ளரி தயிர் பச்சடி
2 லெபனான் வெள்ளரிகள், நீளமாக நறுக்கியது
280கி (1 கப்) கிரேக்க பாணியிலான தயிர்
2 தேக்கரண்டி நறுக்கிய புதினா இலைகள்
1/2 தேக்கரண்டி சீரகம், பரிமாற கொஞ்சம் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை

செய்முறை 1
ஒரு பெரிய கிண்ணத்தில் கோழி கறி, மஞ்சள் தூள், பூண்டு மூன்றில் ஒரு இரண்டு பங்கு மற்றும் 1 தேக்கரண்டி உப்பு போட்டு கலக்கவும். இதை ஒரு பேப்பர் கவர் போட்டு மூடி, குளிர் சாதன பெட்டியில் 30 நிமிடங்கள் நன்கு ஊறும் வரை வைக்கவும்.
செய்முறை 2
ஒரு கடாயில் 60மிலி (1/4 கப்) எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வெங்காயம் மற்றும் 1 தேக்கரண்டி உப்பு போட்டு அடிக்கடி கிளறி, 20 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள். பிறகு இதை ஒரு கிண்ணத்தில் மாற்றுங்கள்.
செய்முறை 3
பின்பு ஒரு கடாயில் 60 மிலி (1/4 கப்) எண்ணெய் ஊற்றி மிதமான தீயில், பாதி கோழிகறி யை போட்டு 1 நிமிடம் அல்லது பொன்னிறமாக வரும் வரை சமைக்கவும், (கவனம்: பொன்னிறமாக வரும் வரை மட்டும் சமைக்கவும், அதிகமாக சமைக்க கூடாது). ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, மீதமுள்ள கோழிகறியையும் இதே போல் சமைக்கவும்.
செய்முறை 4
இப்போது கடாயை நன்கு துடைத்துக் கொண்டு, மிதமான தீயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். நறுக்கப்பட்ட வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாகும் வரை வதக்கவும். மீதமுள்ள பூண்டு மற்றும் இஞ்சி சேர்க்த்து 1 நிமிடம் அல்லது பச்சை வாசனை போகும் வரை கிளறவும். கறிவேப்பிலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, சீரகம், பெருஞ்சீரகம், மிளகாய் தூள் சேர்த்து கறி பொடி போட்டு 1 நிமிடம் அல்லது மணம் பிரியும் வரை கிளறவும். 125மிலி (1/2 கப்) தண்ணீர் சேர்த்து கோழிகறி யை போட்டு திரும்ப 5 நிமிடங்கள் அல்லது கோழிகறி நன்கு வெந்து, குழம்பு கெட்டியாகும் வரை வதக்கவும்.
செய்முறை 5
இதற்கிடையில், ஒரு கிண்ணத்தில் வெள்ளரி தயிர் பச்சடி செய்ய, வெள்ளரிகள், தயிர், புதினா மற்றும் சீரகம் போட்டு கலக்கி வைக்கவும்.
செய்முறை 6
குழம்பில் சர்க்கரை, சோயா சாஸ் மற்றும் வெங்காயம் போட்டு குழம்பு நன்கு சுருண்டு வரும் வரை கிளருங்கள். பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில்மாற்றிக் கொண்டு கறிவேப்பிலை போட்டு அலங்கரியுங்கள். சாதம் மற்றும் தயிர் பச்சடியுடன், சிறிது சோம்பை தூவி பரிமாறவும்.