Home சமையல் குறிப்புகள் சிக்கன் கறி

சிக்கன் கறி

21

1443970038chickenvaruvalதேவையான பொருள்கள்

சிக்கன்- 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளவு
எண்ணெய் – 4 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை- சிறிதளவு

அரைப்பதற்கு தேவையான பொருள்கள்

தனியா – 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
சீரகம்- 1 ஸ்பூன்
இலவங்கப்பட்டை – 1 துண்டு
மிளகு – 2 ஸ்பூன்
கிராம்பு- 4
தேங்காய் துருவல் -1/4 கப்

செய்முறை

சுத்தம் செய்து வைத்த சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்

ஒரு கடாயில் தேங்காயை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து வறுக்கவும். பின்பு தேங்காய் சேர்த்து வறுத்து இறக்கி அரைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

கறிவேப்பிலை சேர்த்து கிளறி அதனுடன் சிக்கனை சேர்த்து சில நிமிடத்திற்கு பிறகு தக்காளி கலந்து குக்கரை மூடி வைத்து வேகவிடவும். 2விசிலில் சிக்கன் வெந்ததும் கடாயில் கொட்டி சிறிது நேரம் கிளறி பின்னர் அரைத்த மசாலாவை கலந்து வேவிடவும். பின்பு மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.