Home சமையல் குறிப்புகள் சல்மன் மீன் கறி

சல்மன் மீன் கறி

14

download (3)சல்மன் மீன் – 500 கிராம்
வெங்காயம் – 30 கிராம்
கறி பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி
கறித்தூள் – 3 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
தேசிக்காய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
மீனை சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன் தேசிக்காய், இஞ்சி பூண்டு விழுது, 1 1/2 தேக்கரண்டி கறித்தூள், ஒரு தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை போட்டு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய மீன் துண்டுகளை அவண் ட்ரேயில் க்ரில் கம்பியில் அடுக்கி மீடியம் ஹீட்டில் க்ரில் செய்யவும். இம்மீன் எளிதில் வெந்துவிடும், மெதுவாக கலர் மாறியதும் எடுத்துக் கொள்ளவும். வெள்ளைப் பால் போல, ட்ரேயில் வடிந்திருப்பதைக் காணலாம், நன்கு முறுகவிட்டும் எடுக்கலாம், நன்கு முறுகவிட்டால், நேரடியாக பொரியல் போல சாப்பிடலாம்.
க்ரில் வசதி இல்லாதவர்கள் அடுப்பில் தோசை கல்லை போட்டு சிறிது எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு வாட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் 1 1/2 தேக்கரண்டி கறித்தூள், 2 மேசைக்கரண்டி கறிபேஸ்ட் சேர்த்து பிரட்டவும்.
அதில் 250 மி.லி தண்ணீரும் ஒரு தேக்கரண்டி உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும், மீன் துண்டுகளைப் போடவும். மீன் துண்டுகளைப் பிரட்டிப் பிரட்டி விட்டு, கறி பிரட்டலானதும் இறக்கவும்.
சுவையான சல்மன் மீன் கறி ரெடி.