Home சமையல் குறிப்புகள் சமையல் குறிப்பு: தவலை அடை

சமையல் குறிப்பு: தவலை அடை

34

imagesதேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
தாளிக்க
எண்ணை, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
அரிசியையும் பருப்புகளையும் மிள கு, மிளகாய் சேர்த்து மிஷினில் அல் லது மிக்ஸியில் தயாராக ரவைப் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொ ள்ளவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண் ணை வைத்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து 4 கப் தண் ணீர் சேர்க்கவும்
தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் தேங்காய்த் துருவல், அரை த்துவைத்திருக்கும் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
மேலே முதல் வகை அடைக்குச் சொன்ன முறையிலேயே உருளி அல்லது வாணலியில் அடைகளாகத் தட்டி மேலே மூடி வேக வைக்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு, நடுவிலும் துளையிட்டு எண்ணெய் விட்டு, சிவக்க வேகவைக்கவும்.
மறுபக்கமும் திருப்பிவிட்டு, எண்ணைவிட்டு மொறுமொறுப்பாக எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
என்னங்க சூடான சுவையான தவல அடை தயாராயிடுச்சு, அப்புறம் என்னங்க! நீங்களும் சாப்பிட்டுவிட்டு, எனக்கு இரண்டு தவல அடையை வையுங்க• எனக்கு பசிக்குது சீக்கிரமா செய்யுங்கள்.