Home சமையல் குறிப்புகள் கோதுமை மாவு – வாழைப்பழ பணியாரம்

கோதுமை மாவு – வாழைப்பழ பணியாரம்

12

11204468_1110570968962394_7985197946415046203_n-300x199தேவையானவை :
கோதுமை மாவு – அரை கப்
வாழைப்பழம்- 2
தேங்காய் துருவல் – அரை கப்
துருவிய கருப்பட்டி அல்லது துருவிய வெல்லம் – இனிப்புக்கேற்ப
ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை :
* கோதுமை மாவை நன்றாக கரைத்து கொள்ளவும்.
* வாழைப்பழத்தை தோல் உரித்து நன்றாகப் பிசைந்து, அதில் துருவிய தேங்காய், துருவிய வெல்லம், ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கரைத்த கோதுமை மாவு கலவையில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். கலவை சற்று கெட்டியாக இருக்கும் படி கரைத்து கொள்ளவும்.
* குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு குழியிலும் அரை கரண்டி மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சுவையான கோதுமை மாவு – வாழைப்பழ பணியாரம் ரெடி.