Home சமையல் குறிப்புகள் கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

13

தேவையான பொருட்கள்:
தக்காளி – 4 (நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
துருவிய தேங்காய் – 1/2 கப்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளியானது நன்கு வெந்ததும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதற்குள் மிக்ஸியில் தேங்காய், வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை வாணலியில் உள்ள தக்காளி கிரேவியுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு ரெடி!!! – See more at: http://www.tamilnews.cc/news.php?id=65335#sthash.oPeLCYcf.dpuf