Home சமையல் குறிப்புகள் கேரட் – பப்பாளி ஜூஸ் செய்வது எப்படி

கேரட் – பப்பாளி ஜூஸ் செய்வது எப்படி

19

Captureதேவையான பொருட்கள் :

கேரட் – 1
பப்பாளி பழம் – 1
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பால் – ஒரு கப்
தண்ணீர் – 2 கப்
தேன் – சுவைக்கு
ஐஸ் கட்டி – 5 (தேவைக்கு)

செய்முறை:

* கேரட், இஞ்சியை கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

* பப்பாளி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* பப்பாளி பழத்துண்டுகளுடன் கேரட் ஜூஸ், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

* பருகுவதற்கு முன் காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ்கட்டி கலந்து பருகவும்.

* பால், ஐஸ்கட்டி விரும்பாதவர்கள் அதை சேர்க்காமலும் பருகலாம்.

* சுவையான கேரட் – பப்பாளி ஜூஸ் தயார்.

குறிப்பு:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
கேரட்டில் வைட்டமின் ‘ஏ’ சத்தினை மலிவாகப் பெறலாம். வாழ்நாள் இறுதிவரை கண்களுக்கு கண்ணாடி அணியாமல் தவிர்க்க கேரட் நிறைய சாப்பிடவும்.