Home குழந்தை நலம் குழந்தை ரொம்ப கொளு கொளுன்னு இருக்கா? எடை குறைக்க ஐடியா

குழந்தை ரொம்ப கொளு கொளுன்னு இருக்கா? எடை குறைக்க ஐடியா

31

சில ஆரோக்கியமற்ற உணவு வகைகளை உண்பதால், உடல் பருமன் ஏற்பட்டு வெகுவரையாக குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

சிப்ஸ், அதிக எண்ணை கலந்த உணவு வகைகள், நூடில்ஸ், பர்கர் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கப்பதற்கே வழிவகுக்கும்.

எனவே பெற்றோர்கள் இந்த உணவுகளை கொடுப்பதை தவிர்த்து உடல் பருமனை தடுக்க சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் உங்கள் குழந்தைகளுக்கு கொழுப்பினால் ஏற்படும் இரத்த அழுத்தம், மாரடைப்பை தவிர்க்கலாம்.

கட்டாய காலை உணவு

உங்கள் குழந்தைகள் காலை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

எண்ணையில் செய்யும் சிற்றுண்டிகளை விட தானிய வகைகள் மற்றும் இயற்கை உணவுகளை அளிப்பதன் மூலம் கொழுப்பு குறையும்.

நொறுக்கு தீனி கூடாது

பசிக்கும் வேளையில் நொறுக்கு தீனிகள் கொடுப்பதை தவிர்த்துவிட்டு சில சத்தான ஆகாரங்களை கொடுத்தால் அதிகப்படியான பசி ஏற்படுவது நாளடைவில் தவிர்க்கப்படும்.

நல்லா விளையாடனும்

எப்போதும் தொலைக்காட்சி வீடியோ கேம்ஸ் கணனியின் முன் குழந்தைகளை அமரவிடாமல் அவர்களை வெளியே சென்று விளையாட சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.

பரிசோதனை அவசியம்

ஆண்டுக்கு ஒரு முறையாது பரிசோதனைக்கு மருத்துவரிடம் உங்கள் குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்.

அப்போது தான் குழந்தைகளுக்கு அதிகப்படியான உடல் எடை ஆகாமல் இருக்கும்