Home குழந்தை நலம் குழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான 5 உணவுகள்

குழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான 5 உணவுகள்

26

குழந்தைகள் பிறந்த சமயம் உள்ள உயரம் முழுவதும் ஜீன் என்ற மரபு கடத்துப்பொருள் மூலமாக பெற்றதே! பிறந்தபின் முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மூலம் உடலுக்குத் தேவையான எடை, ஆரோக்கியம் மற்றும் அடிப்படை சத்துக்களை பெறுகின்றனர்; ஓரளவு உயரத்தையும் பெறுவர். குழந்தைகள் நல்ல, போதுமான அவர்களுக்கு 5 உணவு பொருட்களின் தேவை அத்தியாவசியமாகிறது. அந்த 5 உணவுகள் என்னென்ன என்று இந்த பதிப்பில் பார்க்கலாம்.

1. பால் என்றாலே நமக்கு கால்சியத்தின் நினைவு தான் வரும். பாலில் உள்ள கால்சியம் எலும்பை பலப்படுத்துவதோடு குழந்தைகளின் உயரத்தையும் அதிகரிக்க உதவுகிறது. பால் பிடிக்காத குழந்தைகளுக்கு, பாலுடன் பழங்களை கலந்து தர விரும்பி பருகுவர். பாலில் வைட்டமின் எ மற்றும் புரத சத்துக்களும் நிறைந்துள்ளன.

2. உலர் திராட்சை மற்றும் பருப்புகள் அமினோ அமிலம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளன; இவை உடல் திசுக்களை புதுப்பிக்க உதவுகின்றன. மேலும் உலர் திராட்சைகள் குழந்தைகளின் வளர்ச்சி ஹார்மோனை தூண்டுவதாக விளங்குகின்றன.

3. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் எலும்பு திசுக்களை வளரச் செய்து, உடல் வளர்ச்சியை அதிகரிக்கின்றன; மேலும் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.

4. சோயா பீன்கள் அதிகப்படியான புரதச் சத்து கொண்டவை. சோயா பால் குழந்தைகளுக்கு ஏற்றது. இது எலும்பு மற்றும் திசுக்களின் பலத்தை அதிகரிக்க உதவுகின்றது. இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், வைட்டமின் எ மற்றும் டி, கால்சியம் சத்துக்களும் உள்ளன.

5. முட்டைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றவை. இதில் வைட்டமின் டி, கால்சியம், வைட்டமின் பி2/ரிபோபிளவின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை குழந்தைகளுக்கு பலம் அளித்து, உயரத்தை அதிகரிக்க உதவுகின்றன.

குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க சரியான உணவுகள் அவசியம். ‘ஒரே நாளில் ஒபாமா ஆக முடியாது என்பது’ எவ்வளவு உண்மையோ அதே போல், ‘ஒரு நாள் இரவில் குழந்தையின் உயரம் அதிகரிக்காது’. உயரத்தை அதிகரிக்கும் உணவுகளையும், நீச்சல், டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை தினசரி விளையாடி, உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், குழந்தையின் உயரத்தில் முன்னேற்றத்தைக் காணலாம்..!