Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல், சளியை வீட்டிலேயே எப்படி சரிசெய்யலாம்?…

குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல், சளியை வீட்டிலேயே எப்படி சரிசெய்யலாம்?…

18

இருமல், சளி தொல்லைகள் சாதாரணமாக குளிர் மற்றும் மழை காலங்களில், குழந்தைகளுக்கு ஏற்படக் கூடியவை தான். அதனால் எதற்கெடுத்தாலும் மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு ஓடத் தேவையில்லை.

அதனால் வீட்டில் எப்போதும் சில கை மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுத்து வாருங்கள். எத்தகைய கோழைச்சளியாக இருந்தாலும் சரிசெய்துவிட முடியும்.

மிதமான வெந்நீரில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து, குழந்தைக்குக் கொடுத்தால், அது உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தி, சளித் தொல்லையை அறவே நீக்கிவிடும். ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

“இருமலை இல்லாமல் ஆக்கிடும் இஞ்சி”.கொதிக்கும் நீரில், சிறிதளவு இஞ்சியை சேர்க்க வேண்டும். நீர் கொதிநிலையை அடைந்தபின், ஒரு தேக்கரண்டி தேனை அதனுடன் சேர்த்து பின் வெதுவெதுப்பான நிலையில் குழந்தைகளுக்குக் கொடுக்கவும்.

குழந்தையின் மூச்சுப் பாதையை சரி செய்ய உப்பு உதவுகிறது. ஒரு கப் தண்ணீரில், சேர்க்கப்படும் 1/4 தேக்கரண்டி உப்பு. இந்த உப்புத் துளிகளை, பல்ப் சிரஞ்ச் மூலம் நாசியின் ஒரு துவாரம் வழி செலுத்தினால் மற்றொரு துவாரம் வழியே சளி வெளியேறிவிடும். ஒரு நாளைக்கு 4 முறை மட்டுமே இதைக் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.

2-3 கிராம்பு சேர்த்த பூண்டு விழுதை, நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, பின் குளிர வைக்கவும். இந்நீருடன் தேன், சிறிதளவு மிளகாய்த்தூள், சில துளிகள் லெமன் ஜூஸ் கலந்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தைக்குத் தரலாம். இது சளி, இருமலை இருந்த இடம் தெரியாமல் மாயமாக்கும்.

மஞ்சள் தூள் சிறிதளவை, நீருடன் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். பின் சிறிதளவு வெல்லம் (அல்லது ½ தேக்கரண்டி நெய்), கொஞ்சம் உப்பு சேர்க்கவும். இந்த ஆயுர்வேத மருந்து, குழந்தையின் இருமலை, இலகுவாக போக்கும். இதிலுள்ள மஞ்சள் நோய்த் தொற்றுடன் போராடி, வீக்கங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அவற்றை நீக்கும்