Home குழந்தை நலம் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் அவசியம்

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் அவசியம்

22

Captureதினசரி உங்கள் குழந்தையின் உணவுமுறையில் பால் உணவுகளை அதிகளவில் சேர்த்து கொள்ளுங்கள். அது, பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதிலிருக்கும் கால்சியம் மற்றும் உயர்ரக புரதச்சத்து எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமையை அதிகரித்து நன்கு வளர உதவுகிறது.

முட்டையில் புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி2, ரிபோப்லாவின் போன்ற ஏனைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இவை குழந்தைகளின் எலும்புகள் நன்கு ஆரோக்கியமாக வளர பயனளிக்கின்றன.

சிக்கனில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இது பருவமடைந்த பிறகும் நன்கு வளர உதவும் உணவாகும். இதுவும், எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை அதிகரிக்கும் உணவாக தான் திகழ்கிறது.

வாழைப்பழத்தில் இருக்கும் பட்டாசியம் மற்றும் கால்சியம் எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது. இதனால், குழந்தைகள் நன்கு வளர்வார்கள்.

சோயாபீன்சில் ஃபோலேட், வைட்டமின்ஸ், புரதச் சத்துக்கள், கார்ப்ஸ் இருக்கின்றன. இவை குழந்தைகளின் தசை, மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளித்து நன்கு வளரவும் உதவுகின்றன.

சால்மன், சூரை போன்ற மீன்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்தவை ஆகும். இவை, குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்.