Home உறவு-காதல் காதல்ல இப்படியும் கூட மோதல் வரலாம்! அதை சரி செய்வது எப்படி என தெரியுமா?

காதல்ல இப்படியும் கூட மோதல் வரலாம்! அதை சரி செய்வது எப்படி என தெரியுமா?

34

இன்று பல உறவுகளுக்குள் பிரிவு ஏற்படுவதே புரிதல் என்ற ஒன்று இல்லாமல் போவதால் தான். அன்பு, பாசம் எல்லாம் உறவுகளுக்குள் இருந்தாலும் கூட, புரிதல் என்ற ஒரு ஆணிவேர் மட்டும் இல்லை என்றால், எத்தனை பாசம் உள்ளே இருந்தாலும் உறவுகளுக்குள் விரிசல் உண்டாக தான் செய்யும்.

உண்மையான உறவு என்பது பிறரது சூழ்நிலையை புரிந்து கொள்ளும். வெளிப்படையான பேச்சு அதில் இருக்கும். ஒரு சில விஷயங்களை வெளிப்படையாக பேசினால் பிரச்சனை வரும், ஆனால் ஒரு சில விஷயங்களை வெளிப்படையாக பேசிவிடுவது தான் சிறப்பு. இந்த பகுதியில் புரிதல் இல்லாமல் வரும் சண்டைகளை எப்படி ஜெயிப்பது என்பது பற்றி காணலாம்.

பொங்கி எழ வேண்டாம்! உங்களது துணையிடம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதைப்பற்றி முதலில் உங்களது துணையிடம் பேசுங்கள். அதைவிட்டுவிட்டு உங்களது நண்பர்களிடம் எல்லாம் அதைப்பற்றி கூறி, உங்களது துணையை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள். ஒருவேளை அவர் செய்த ஒரு செயலால் தான் நீங்கள் வேதனையில் இருக்கிறீர்கள் என்பது உங்களது துணைக்கு தெரியாமலேயே கூட இருக்கலாம்.

நேராக பேசுங்கள் உன்னால் நான் இவ்வாறு காயப்பட்டுவிட்டேன், இனிமேல் இது போல செய்யாதே என்று தனிமையில் இருக்கும் போது அவரிடம் பொறுமையாக எடுத்துக்கூறினால், உங்கள் மீது அவருக்கு மரியாதை அதிகரிக்கும். உங்களது பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும். அதைவிட்டு விட்டு மற்றவர்களிடன் உங்களது பிரச்சனை பற்றி விவாதிப்பது வேண்டாம்.

ஒரு புறம் மட்டுமே பார்க்க வேண்டாம் உங்களிடம் ஒருவர் உங்களது துணையை பற்றி வேறு விதமாக நம்பும் படியாகவே கூறினாலும் கூட, அது உண்மை என நிரூபித்தாலும் கூட நீங்கள் இருவரையும் வைத்து பேச வேண்டியது அவசியம். ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துவிட்டு முடிவு எடுப்பது தான் சிறந்த முட்டாள் தானம்.

என்னவாகும்? நீங்கள் ஒருவர் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தால், அது உங்களது துணையின் மனதை காயப்படுத்தும். இந்த வடு என்பது என்றைக்குமே ஆறாத ஒன்றாக மாறிவிடும். நீ என்னை நம்பவில்லை.. மற்றவர்களை தானே நம்பினாய் என்ற மனப்பாங்கு அவருக்கு வந்துவிடும். இப்படி ஒரு காயம் ஏற்பட்டுவிட நீங்கள் காரணமாகிவிட வேண்டாம்.

அமைதி ஒரு பிரச்சனை என்றால் அமைதியாக இருந்து சற்று சிந்தித்து பாருங்கள். அவரது சூழ்நிலையில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். உங்களது பிரச்சனைக்கு தீர்வு, பிரச்சனைக்கு காரணமாக நீங்கள் நினைப்பவர்களிடம் தான் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

வெல்வது சாதனை இல்லை உங்களது குறிக்கோள் சண்டையை முடிவுக்கு கொண்டுவருவதாக மட்டும் தான் இருக்க வேண்டுமே தவிர, சண்டையில் யார் வெல்வது என்பதாக இருக்க கூடாது. அவர் புறமே நியாயம் இருந்து கொண்டு போகிறது என சண்டையை முடித்துக்கொள்ள வேண்டும்.

பேச்சை மதிக்க வேண்டும் உங்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள தான் நீங்கள் அவரிடம் பேச போகிறீர்கள் என்றால் அவரது பேச்சுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் சொல்வதை கொஞ்சமாவது புரிந்து கொள்ள முயற்ச்சி செய்ய வேண்டியது அவசியம்.