Home உறவு-காதல் காதலியை தெரிவுசெய்யும் முறைகள்

காதலியை தெரிவுசெய்யும் முறைகள்

19

1. காதலியை ஒழுங்குபடுத்தல். (Configuring a Girlfriend )

2. காதலியை இன்ஸ்ரோல் செய்தல். (Installing a Girlfriend )

3. நிரலை ஓடச்செய்தல். (Running the program) ஆகவே, ஒரு பையன் முதில் அறியவேண்டி பாடம் காதலியை ஒழுங்குபடுத்தல். அதற்குரிய தேவைப்பாடுகள். (Requirements)

1. தைரியசாலியாக இருத்தல் வேண்டும், ஆனால் நிலைமைகளைச் சமாளிப்பதில் கெட்டிக்காரனாக இருத்தல் வேண்டும்.

2. கதைப்பதில் கெட்டித்தனமாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட கதைப்பதைக் கேட்பதில் பக்குவமுள்ளவனாக இருத்தல் வேண்டும்.

3. பார்வைக்கு அழகாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட சுறுசுறுப்பானவனாக இருத்தல் வேண்டும்.

4. உணர்வுபூர்வமானவனாக (emotional) இருத்தல் வேண்டும், அதைவிட தாங்குதிறன் உள்ளவனாக இருத்தல் வேண்டும்.

5. விளையாட்டுத்தனமுள்ளவனாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட போட்டித்தன்மை உடையவனாக இருத்தல் வேண்டும்.

6. அக்கறை எடுப்பதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட வருமுன் காப்புகளில் சிறப்பாக இருத்தல் வேண்டும்.

7. பரிசுகள் கொடுப்பதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும், அத்தோடு அதைவிட சேமிப்பில் அக்கறையுள்ளவனாக இருத்தல் வேண்டும்.

8. முன்னகர்த்தல் குறுஞ்செய்திகள் அனுப்புவதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட சுயமாக தயாரித்த குறுஞ்செய்திகள் அனுப்புவதில் வல்லவனாக இருத்தல் வேண்டுமு்.

9. அவளை மக்டொனாலட்ஸ் இற்கும், MC இற்கும் அழைத்துச் செல்வதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரனாக இருத்தல் வேண்டும்.

10. அவளுக்கு வெளிப்படையாக இருப்பதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும், அதைவிட பெற்றோர்களுக்கு நல்லவனாக இருப்பது முக்கியமானது. இவ்வாறான பழக்கங்கள் உங்களிடம் இருக்குமாயின் நீங்களும் ஒருசிறந்த காதலனாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு.

அவளிடம் காதலைச் சொல்ல முன்னர் இன்னும் சில விடயங்களை படித்துக் கொள்ளுங்கள்.

1. அவள் அடிக்கடி ‘கடவுள் விட்ட வழி, god knows போன்றவற்றைப் பயன்படுத்தின் அவளுக்கு உணர்வுபூர்வ ஆதரவு தேவைப்படுகிறது, ஆனால் அவளது குடும்ப முடிவுகள் பற்றி அவளுக்குத் தெரியாது.

2. அவள் அடிக்கடி cute, sweet, loving போன்ற சொற்களைப் பயன்படுத்தின் – அவள் உங்களிடம் இவற்றைப் பயன்படுத்தின் அவள் உங்கள் மீது அன்பாக இருக்கலாம், ஆனால் அது காதலாக இருக்க வேண்டி அவசியம் இல்லை.

3. அவள் மென்மையாகக் கதைக்கிறாள் – இது அவள் பக்குமடைந்தவள் என்பதைக் காட்டுகிறது, அத்தோடு உணர்வுபூர்வமாக கெட்டிக்காரி என்பதையும் காட்டுகிறது, ஆனாலும் அங்கும் சிறிது போலித்தன்மை இருக்கலாம்.

4. அவள் அவசரப்பட்டு, கடுமையாகக் கதைக்கிறாள் – இது அவள் திடீரெண்டு ஒருவனுடன் காதலில் விழ இடமுண்டு எனக்காட்டுகிறது, எனினும் அவள் அடிக்கடி மாறவும் இடமுண்டு. அவள் அடிக்கடி மாறவும் இடமுண்டு. அவள் உடையணியும் பாங்குகள்….

1. அவள் நாகரிக்கத்திற்கேற்றவாறு உடையணிபவளாகவும், உடையணியும் நாகரிகத்திற்கேற்றவாறு தன்னை இற்றைப்படுத்திக் கொள்பவள்- இது அவள் தனது தெரிவு பற்றி தெளிவாக இருப்பாள் என்பதோடு தனது ஆண் நண்பர்களோடு போட்டித்தன்மையொன்றை ஏற்படுத்துவாள்.

2. அவள் அடிக்கடி பாரம்பரிய உடைகளை அணிபவள்- இது அவள் தனது தெரிவுகளில் கண்டிப்பானவள் என்பதையும், தன்னோடு அதிகளவு ஆண் நண்பர்களையும் அனுமதிக்க மாட்டாள் என்பதும் தெளிவு.

3. அதிகளவு முகப்பூச்சுகள், ஆபரணங்கள், அலங்காரங்களையும், உயர் நாகரிகமும் கொண்டவள் – இது அவள் அதிகளவு ஆண் நண்பர்களைக் கொண்டிருப்பாள் என்றும், தற்காலிக உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொண்டவளாக இருப்பாள் என்றும் பொருட்படும்.

4. தனத ஆடைத்தெரிவுகள் பற்றிக் கவலை இல்லாதவள்- இவர்கள் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்றும், உணர்வுபூர்வமாக அந்ததந்த வேலைகளை குறித்த நேரத்தில் செய்பவர்கள் என்றும் பொருள்படும். ஆகையால் இவர்களை உங்களுக்கு பரிந்துரைக்க முடியாது.

நண்பர்களைக் கவனித்துக் கொள்…

1. அவளுக்கு அதிக ஆண் நண்பர்கள் உண்டு – அனேகமாக அவள் ஒரு காதலனைக் கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு, இல்லாவிடில் அவள் தனது எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்க நிறையக் காலம் எடுப்பாள்.

2. அவளுக்கு அதிக பெண் நண்பிகள் உண்டு – இவள் குடும்ப கட்டுப்பாடுகள் அதிகம் கொண்டவள், அதனால் உங்களுக்கு கடினமான இலக்காக அமைந்துவிடுவாள்.

3. நிறையப் பணக்கார நண்ப, நண்பிகளைக் கொண்வள் – அவள் பொதுவாக இந்தப் பணக்கார சூழ்நிலையிலேயே வளந்தவளாக இருக்க வாய்ப்புகள் உண்டு, இவ்வாறானவர்கள் மத்திய வர்க்கத்தினருடன் நட்புக் கொண்டாலும் காதலிப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு.

4. அவளிடம் நிறைய நண்ப, நண்பிகள் இல்லை – இவர்கள் தான் உங்கள் தெரிவுகள். இவர்களைக் காதலிக்கும் ஆரம்பத்தில் ஈகோ பிரச்சினைகள் வரலாம் என்றாலும் அவை சாதாரணமானவை. சத்தியங்களைக் காப்பதில் பொறுப்பானவர்கள்