Home உறவு-காதல் காதலியிடம் அடிக்கடி பொய்கூறும் ஆண்கள்

காதலியிடம் அடிக்கடி பொய்கூறும் ஆண்கள்

29

download (3)தனது காதல் துணையை பார்க்க செல்லும் போது ஓரிரு பொய்களாவது பேசாமல் ஆண்களாலும் இருக்கவே முடியாது. ஆண்கள் தாங்கள் என்ன பொய் கூறினோம் என்று ஆண்களே மறந்துவிடுவார்கள்.

* பெரும்பாலான ஆண்களுக்கு காதலில் மட்டும் ஞாபக மறதி ஏற்படுவது இயல்பு. எப்போதோ நடந்த கிரிக்கெட் ஸ்கோரை எல்லாம் நினைவில் வைத்திருக்கும் ஆண்கள் கூட காதலி ஏதாவது கூறினால் மறந்துவிடுவார்கள்.

* தன் ஆண் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டு காதலியை மறந்துவிடும் ஒவ்வொரு ஆணும் கூறும் ஒரே பொய், “கொஞ்சம் வர்க் ஜாஸ்தி ஆயிடுச்சு!!” * சரக்கு பார்ட்டி, அலுவலக தோழிக்கு உதவிக் கொண்டிருக்கும் போது, தம்மடித்துக் கொண்டிருக்கும் போதென, பல சூழல்களில் காதலியின் அழைப்பை எடுக்க மறுக்கும் ஆண்கள் கூறும் பொய் இது. “மீட்டிங்ல இருந்தேன் அதான் கால் எடுக்க முடியல!!”

* நண்பர்களுடன் வெளியே செல்ல ப்ளான் போட்டிருக்கம் போது, அல்லது நண்பர்களை வீட்டுக்கு அழைத்திருக்கும் போது ஆண்கள் தங்கள் காதலியிடம், தூக்கம் வருகிறது, உடல் சோர்வாக இருக்கிறது என்று நிறைய பொய்களை அள்ளிவிடுவார்கள்.

* மேலும் ஆண்கள் பொய் சொல்ல அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. “அய்யோ மறந்துட்டேன், நான் கிளம்பிட்டேன், வர வழியில டிராபிக் ஜாஸ்தி அதான் லேட்”. இந்த பொய்களை கூறாமல் ஆண்களால் இருக்க முடியாது.