Home சமையல் குறிப்புகள் காடை முட்டை வறுவல் செய்வது எப்படி

காடை முட்டை வறுவல் செய்வது எப்படி

24

201604211350569508_kada-mutta-fry--Simple-Quail-Eggs-Fry_SECVPFதேவையான பொருட்கள் :

காடை முட்டை – 12
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

* காடை முட்டை வேக வைத்து ஓட்டை உடைத்து தனியாக வைக்கவும்.

* வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலையை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு பாதி வேகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* அடுத்ததாக காடை முட்டையை போட்டு 5 நிமிடம் மிதமாக தீயில் வதக்கிய பின் இறக்கி பரிமாறவும்.

* சுவையான காடை முட்டை வறுவல் ரெடி.