Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பமாக இருக்கும்போது டீ, காபி குடிக்கலாமா?..

கர்ப்பமாக இருக்கும்போது டீ, காபி குடிக்கலாமா?..

28

பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் டீ மற்றும் காபி குடிக்கலாமா? கூடாதா? என்ற மிகப்பெரிய சந்தேகம் இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே டீ குடிக்கலாமா கூடாதா என்று தெரிந்து கொள்வது மிக அவசியம்.

காபி மற்றும் டீயில் காஃபின் என்ற பொருள் உள்ளது. இது செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதுவும் ஒரு வகை போதை பொருள் தான். நாம் காபி அல்லது டீ குடித்தவுடன் சுறுசுறுப்பாக இருப்பது போல் உணர்வதற்கு இந்த காஃபின் தான் காரணம்.

கர்ப்ப காலத்தில் டீ, காபி குடிப்பது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக தாயின் உடல் அதை ஜீரணித்துவிடும். ஆனால் வயிற்றில் உள்ள குழந்தையால் அது இயலாது.

அதனால் கர்ப்ப காலத்திலும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலும் டீ, காபி குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதனால், காபி மற்றும் தேநீர் எடுத்துக் கொள்வதை நிறுத்தி, பால், பழச்சாறு, தண்ணீர் என்ற உடலுக்கு நலம் பயக்கும் பானங்களை குடிப்பது உங்கள் உடலுக்கும் நல்லது. வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது.