Home பெண்கள் தாய்மை நலம் Karppam கர்ப்பத்தின் போது ஏற்படும் ஒற்றைத் தலைவலி

Karppam கர்ப்பத்தின் போது ஏற்படும் ஒற்றைத் தலைவலி

38

ஒற்றைத் தலைவலி என்பது என்ன? (What is Migraine?)

முதலில் ஒரு பக்கத்தில் தொடங்கும் தலைவலியே ஒற்றைத் தலைவலி என்பதாகும். பிறகு அந்தத் தலைவலி மிதமானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். பிறகு இரண்டு பக்கமும் பரவலாம். இந்தத் தலைவலி சில மணிநேரம் முதல் சில நாட்கள் வரை நீடிக்கலாம். பெரும்பாலும் ஒற்றைத் தலைவலியுடன் சேர்ந்து உடல் சுகவீனம், வாந்தி, ஒலி மற்றும் ஒளியால் அதிகம் பாதிக்கப்படுதல் போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம். சிலசமயம் ஒற்றைத் தலைவலிக்கு அவுரா அறிகுறிகள் தோன்றலாம். ஒற்றைத் தலைவலி குறித்து எச்சரிக்கும் சில அறிகுறிகளின் தொகுப்பே அவுரா எனப்படுகிறது. இந்த அறிகுறிகளில் சில:

மங்கலான பார்வை
பார்வையற்ற புள்ளிகள் அல்லது நிறப்புள்ளிகள்
கண்ணில் நட்சத்திரங்கள் போன்று அல்லது பளிச்சிடும் வெளிச்சங்கள் தெரிவது
கண்ணில் வலி
குமட்டல்

ஒற்றைத் தலைவலியைத் தூண்ட பல்வேறு காரணிகள் இருக்கலாம். இவை தூண்டு காரணிகள் எனப்படும். இவற்றில் சில:

ஹார்மோன் மாற்றங்கள்
மீன், சீஸ், சாக்லேட் போன்ற சில உணவுகள்
ஆல்கஹால், காபி போன்ற பானங்கள்
பசி
மன அழுத்தம்
பிரகாசமான ஒளி
உரத்த சத்தம்
அதிக வாசனை
தூங்கும் விதத்தில் மாற்றங்கள்
அதிக குளிர் அல்லது வெப்பம்
கர்ப்பத்திற்கும் ஒற்றைத் தலைவலிக்கும் உள்ள தொடர்பு (What is the relation between pregnancy and migraine?)

கர்ப்பத்தின் போது ஒற்றைத் தலைவலி வருவது குறையும் என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.  மாதவிடாய் சுழற்சியின் போது உங்களுக்கு வழக்கமாகவே ஒற்றைத் தலைவலி வரும் என்றால், கர்ப்பத்தின்போது ஒற்றைத் தலைவலி குறைய 60-70% வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் காண்பித்துள்ளன. அவுரா அறிகுறிகள் இல்லாமல் ஒற்றைத் தலைவலி இருப்பதற்கும் ஈஸ்ட்ரோஜென் குறைவுக்கும் பெரும்பாலும் தொடர்புள்ளது. கர்ப்பத்தின்போது ஒற்றைத் தலைவலி குறைவதற்கு இது காரணமாக இருக்கலாம்.

பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஒற்றைத் தலைவலியைப் பாதிக்கின்றன என்று கருதப்படுகிறது. கர்ப்பத்தின் போது ஏற்படும் இந்த மாற்றங்களால், கர்ப்பமாக இருக்கும் பெண்களில் 50-90% பேருக்கு ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் குறைவதாகத் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. எனினும், நான்கு முதல் ஆறு மாதங்கள் மற்றும் ஏழு முதல் ஒன்பது மாத காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு சரியான பிறகு ஒற்றைத் தலைவலி இல்லாமல் போகலாம் அல்லது குறையலாம்.

சில பெண்களுக்கு கர்ப்பத்தின் போதே முதல் முறையாக ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். ஒவ்வொரு முறை கர்ப்பமடையும்போதும் ஒற்றைத் தலைவலி ஏற்படும் அனுபவம் வெவ்வேறு மாதிரி இருக்கலாம். தாய்க்கு ஒற்றைத் தலைவலியால் அதிக வலி ஏற்பட்டாலும், குழந்தைக்கு அதனால் நேரடி பாதிப்போ தீங்கோ ஏற்படாது.

கர்ப்பத்தின் போது ஒற்றைத் தலைவலி ஏற்படுவதைத் தடுக்க சில குறிப்புகள் (Tips to prevent a migraine during pregnancy)

ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகளை முயற்சி செய்து கண்டறிவது, ஒற்றைத் தலைவலியைத் தடுக்க உதவக்கூடும். கர்ப்பத்தோடு தொடர்புடைய, ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள்:

மனக் கலக்கம் மற்றும் உணர்ச்சி ரீதியான மன அழுத்தம்
தூங்கும் விதத்தில் மாற்றம்
உணவு உண்ணும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம்
பிரகாசமான வெளிச்சம் மற்றும் இரைச்சல்
களைப்பு
கர்ப்பத்தின் போது எப்போதெல்லாம் தலைவலி ஏற்படுகிறது என்று குறித்துக்கொள்வது, ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் சாத்தியமுள்ள தூண்டு காரணிகளைக் கண்டறியவும் சமாளிக்கவும் உதவக்கூடும்.

வாழ்க்கை முறையிலும் சாப்பிடும் பழக்கத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்துவது, ஒற்றைத் தலைவலி ஏற்படும் நிகழ்வுகளையும் அதன் தீவிரத்தையும் குறைக்க உதவும். அவற்றில் சில:

போதுமான ஓய்வெடுக்க வேண்டும்
சரியாகத் தூங்க வேண்டும், சரியாக சாப்பிட வேண்டும்
அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்
காரமான மற்றும் மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
உடலில் நீர் சத்தைத் தக்கவைப்பதற்காக அதிக நீர் பருக வேண்டும்
குறிப்பிட்ட உணவுகள் அல்லது பானங்களை அருந்தினால் ஒற்றைத் தலைவலி ஏற்படும் எனில், அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதே போன்ற பிற தூண்டு காரணிகளையும் தவிர்க்க வேண்டும்
அதிக வெப்பமான அல்லது அதிக குளிரான சூழலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்
யோகா அல்லது ஆசுவாசப்படுத்தும் பயிற்சிகளைச் செய்யலாம்
மிகக் கடினமான உழைப்பு தேவைப்படும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்
ஐஸ் ஒற்றடம் கொடுக்கலாம், ஒற்றைத் தலைவலி தொடங்கும் சமயத்தில் அமைதியான இருட்டான அறையில் ஓய்வெடுக்கலாம்.
கர்ப்பத்தின்போது ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அதற்கு எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகள் (What medications can be taken for a migraine during pregnancy?)

பெரும்பாலான மருந்துகளை கர்ப்பத்தின்போது எடுத்துக்கொள்வது நல்லதல்ல. ஆகவே, எப்போதும் ஒற்றைத் தலைவலிக்காக ஏதேனும் மருந்து எடுத்துக்கொள்ளும் முன்பு நீங்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாக ஓரிரு வாரங்களுக்கு மேலாக ஒற்றைத் தலைவலி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.

உங்கள் மருத்துவர் பின்வரும் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்:

பாராசெட்டமால்: கர்ப்பத்தின் போது அல்லது தாய்ப்பாலூட்டும் சமயத்தில் வலி நிவாரணத்திற்கு பாராசெட்டமால் எடுத்துக்கொள்ளலாம். இது குழந்தைக்கோ தாய்க்கோ தீங்கு எதுவும் ஏற்படுத்தாது.
சுகவீனத்திற்கான மருந்துகள்: கர்ப்பத்தின் போது ஏற்படும் ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளான வாந்தி குமட்டல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
புரோஃபிலாக்டிக் மருந்துகள்: இந்த மருந்துகள் அரிதாகவே பரிந்துரைக்கப்படும்.