Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பகாலத்தில் மலச்சிக்கலை தவிர்ப்பது எப்படி?

கர்ப்பகாலத்தில் மலச்சிக்கலை தவிர்ப்பது எப்படி?

76

எனக்கு மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மலம் கழிப்பதைப் போன்ற உணர்வு இருக்கிறது. ஆனால், மலம் வருவதில்லை. இது ஏன்? இதற்கு ஆயுர்வேத மருந்துகள் போன்றவற்றை நாடலாமா?

உணவு மெதுவாக ஜீரணமாவதால், இரைப்பையில் சிதைக்கப்பட்ட உணவு மெதுவாகக் குடலில் இறங்கும். புரொஜஸ்டீரான் ஹார்மோன் குடலின் சுவர்களைத் தளர்த்திவிடுவதால், அப்பகுதியில் இறங்கும் உணவில் உள்ள நீர்ச்சத்தை குடல் வேகமாக உறிஞ்சி விடுகிறது. இதனால் மலம் இறுகி மலச்சிக்கல் உண்டாகிறது.

வளரும் குழந்தையானது ஆசனவாய்ப் பகுதியில் உள்ள ரத்த நாளங்களை அழுத்துவதாலும் இந்தப் பிரச்னை அதிகரிக்கிறது.
கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது சாதாரணப் பிரச்னை. இரும்புச்சத்து நிரப்பிகள்கூட பிரச்னைகளை அதிகரிக்கும்.

இதற்காக மலமிளக்கிகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆயுர்வேத மாத்திரைகள் வடிவில் விற்கப்படும் மலமிளக்கிகள் உள்பட அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சிலவேளை இவை கருப்பையையும் துாண்டி, கருச்சிதைவு அல்லது குறைப் பிரசவத்தை உண்டாக்கலாம்.

உணவில் நிறைய நார்ச்சத்துகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நிறைய பழங்கள், காய்கறிகள், ரொட்டிகள், முழு தானிய உணவு ஆகியவற்றைச் சாப்பிடுங்கள்.

காலை உணவு அதிக நார்ச்சத்து உள்ளதாக இருக்கட்டும். சாதாரண மலமிளக்கியான லாக்டுலோஸ் போன்றவை அவ்வப்போது பயனுள்ளதாக இருக்கும்.

காலையில் முதல் வேலையாக வெந்நீர் அல்லது சூடான பானம் குடிப்பது பலன் தரும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் மூலநோய் வரலாம்.