Home அந்தரங்கம் கண்ணைக் கட்டி முத்தம்: கண்டுபிடிக்க முடியுமா ?

கண்ணைக் கட்டி முத்தம்: கண்டுபிடிக்க முடியுமா ?

42

கண்களைக் கட்டிவிட்டு முத்தம் இட்டால் கண்டுபிடிக்க முடியுமா யார் என்று ? என ஒரு போட்டியை கனடாவில் உள்ள மியூசிக் TV தொலைக்காட்சி நடத்தியுள்ளது. உலகப்புகழ் பிரித்தானிய இசைக்குழு த வான்டட் இதில் கலந்துகொண்டுள்ளனர். இக் குழுவில் உள்ள ஐவரும் பல பெண்களின் கண்களைக் கட்டிவிட்டு மாறி மாறி முத்தமிட்டுள்ளனர். முத்தம் கொடுக்கும் நபர் யார் என்று அப்பெண் சரியாகக் கூறவேண்டும். இதுதான் போட்டி. உலகப் புகழ்பெற்ற இந்த பிரித்தானிய இசைக்குழுவில் ஈழத் தமிழர் ஒருவரும் இருக்கிறார் என்றால் உங்களால் நம்பமுடியுமா ?

அவர் பெயர் சிவா கனேஸ்வரன் ஆகும். சிவா ஆரம்பகாலத்தில் பிரித்தானியாவில் மாடலாக அறிமுகமானார். பிரித்தானியாவில் இருக்கும் பிரபல நிறுவனங்களான ஆகோஸ், மற்றும் நெக்ஸ்ட் போன்ற நிறுவனங்களுக்கு இவர் ஆடைகளை அணியும் மாடலாக இருந்தார். பின்னர் இவர் படிப்படியாக உயர்ந்து த -வான்டட் என்னும் இசைக்குழுவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.