Home உறவு-காதல் கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரக்காரணங்கள்

கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரக்காரணங்கள்

20

திருமணமான தம்பதியர்கள் அன்றாடம் ஒருசில விஷயங்களுக்காக சண்டைகளைப் போடுவார்கள். அந்த சண்டைகள் அனைத்தும் சாதாரணமானவை மட்டுமல்லாமல், அதுவே அவர்கள் ஆரோக்கியமான திருமண வாழ்க்கை மேற்கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும்.

• வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு முதன்மையான காரணம் மாமியார். இந்த மாமியார் பிரச்சனையை பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சந்திக்கின்றனர். இந்த காரணம் தான் பெரும்பாலான வீடுகளில் சண்டை வருவதற்கு முதன்மையாக உள்ளது.

• இன்றைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையினால், நிறைய தம்பதிகளால் ஒருவருடன் ஒருவர் போதிய நேரத்தை செலவழிப்பதில்லை என்ற நிலை வரும் போது சண்டைப் போடுகின்றனர். திருமணமான தம்பதிகள் சண்டைகள் போடுவதற்கு மற்றொரு முக்கியமான காரணம் இது தான்.

• படுக்கையில் துணியை அப்படியே போடுவது, காலையில் எழுந்ததும் பயன்படுத்திய போர்வையை மடிக்காமல் அப்படியே போட்டுவிடுவது போன்றவற்றால் கூட சண்டைகள் வருகின்றன.

• வாரம் ஒருமுறை கணவர் தன்னை வெளியில் கூட்டிக்கொண்டு போகவில்லை என்றாலும் மனைவிக்கு கோபம் வரும்.