Home உறவு-காதல் கணவன் மனைவிக்கான பொழுதுபோக்குகள்

கணவன் மனைவிக்கான பொழுதுபோக்குகள்

30

கணவன் மனைவி உறவு என்பது ஒரு அற்புதமான பந்தம். இருவரும் மனதளவில் ஒன்றாகி வாழ்வை பகிர்ந்து கொள்ளும் அழகிய உறவு. வாழ்வின் பெரும்பாலான நேரத்தில் ஒன்றாகவே இருப்பார்கள்.

விரைவில் அவர்களின் நான்கு சுவற்றுக்குள்ளான வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். அவர்கள் சில விஷயங்களில் ஒன்றாக செயல்பட்டால், அந்த சலிப்பை தவிர்த்து மகிழ்ச்சியை தக்க வைத்து கொள்ளலாம்.

உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட சிறப்பான வழி நடனம் தான். இது உங்கள் அன்பை அதிகரிக்க செய்யும். இது மனதை மகிழ்ச்சியடைய செய்வதோடு, உடல் எடையையும் கட்டுக்குள் வைக்க உதவும்.

சமையல் என்பது ஒரு கலை. வீட்டில் இருக்கும் விடுமுறை நாட்களில் இருவரும் விரும்பியதை சேர்ந்து சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம். இது இருவருக்கும் ஒன்றாக நேரம் செலவிட தகுந்த பொழுதுபோக்காகும்.

இனிமையான நினைவுகளின் பெட்டகமாக இருப்பது புகைப்படங்களே. உங்கள் சந்தோசங்களை நினைவுபடுத்தும் அற்புத சாளரம். முடிந்த வரை இருவரும் புகைப்படங்கள் எடுத்து கொள்ளுங்கள்.

இருவருக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருந்து, படித்ததை பகிர்ந்து கொள்ளவும் ஆர்வம் இருந்தால், இந்த பொழுதுபோக்கு உங்களுக்காகதான். தூங்கப்போகும் முன் இருவரும் ஒருவருக்கொருவர் புத்தகத்தை படித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும்.

விளையாட்டு நமக்கு எப்போதும் சிறந்த பொழுதுபோக்காக இருப்பதை விட, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியவை. முடிந்த வரை உங்கள் துணையுடன் சேர்ந்து விளையாடுங்கள்.

இது உங்கள் துணையுடன் சேர்ந்து ஈடுபடக்கூடிய சுவாரசியம் நிறைந்த பொழுதுபோக்காகும். செடிகளுக்கு தண்ணீர் விடுதல், உரமிடுதல் போன்றவை சிறந்த பொழுதுபோக்காகும். இதனால், ரசாயனக் கலப்பில்லாத காய்களை பெற முடியும்.

திரைப்படம் பார்ப்பது அனைவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. இதற்கு, நீங்கள் திரையரங்குகளுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. தொலைக்காட்சிகளில் கூட இருவரும் சேர்ந்து பார்த்து மகிழலாம்.