Home சமையல் குறிப்புகள் ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

23

222ஓட்ஸ் – 1 கப்
ரவை – 1/4 கப்
கடலைமாவு – 1/4 கப்
மோர் – 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு)
காரட் – 2 டேபிள்ஸ்பூன்
முட்டைகோஸ் – 2 டேபிள்ஸ்பூன்
குடைமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு(பொடித்தது) – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – சுடுவதற்கு
முதலில் ஓட்ஸையும், ரவையையும் ஒன்றாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
கடலை மாவையும் பச்சை வாசனை போகும்வரை வறுத்து வைக்கவும்.
காரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மெல்லியதாக அரிந்து வைக்கவும்.
தேங்காயை துருவி கொள்ளவும். மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
வறுத்த மாவு கலவைகளை ஒன்றாக உப்பு போட்டு கலக்கவும். அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் போடவும்.
காரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மாவுடன் கலக்கவும்.
ஊத்தாப்பம் பதத்திற்கு கரைத்தவுடன், சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
தேங்காய் சட்னி (தேங்காய், பொட்டுகடலை, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும். பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க)