Home இரகசியகேள்வி-பதில் எனக்கு நிச்சயமான பெண் வேறு ஒருவருடன் உறவில் இருந்தவளா? நான் என்ன செய்வது?

எனக்கு நிச்சயமான பெண் வேறு ஒருவருடன் உறவில் இருந்தவளா? நான் என்ன செய்வது?

186

நான் 30 வயதுள்ள ஒரு இளைஞன், ஐ.டியில் பணி புரிகின்றேன்…! முப்பது வயதிற்குள் பையனின் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பது பெரும்பாலான குடும்பங்களின் குறிக்கோளாக இருக்கும். அதே போல தான் என் குடும்பத்தினரும், பல நாட்களாக தேடி ஒரு பெண்ணை தேர்வு எனக்காக தேர்வு செய்தார்கள்…! அவளுடன் எனக்கு திருமணம் சமீபத்தில் நிச்சயமும் ஆனது

அவளுடனான சில உரையாடல்களுக்கு பிறகு, எனக்கு அவள் கற்புடையவள் இல்லை என்பது தெரியவந்தது.. ஆனால் நான் இதுவரை கற்புடையவனாக தான் இருந்து வருகிறேன்.. என்னால் அவள் கற்பை இழந்தவள் என்பதை ஜீரணிக்க முடிவில்லை. இப்போது எனது மனது முழுவதும், அவள் தனது கடந்த கால காதல் வாழ்க்கையில் எப்படி இருந்து இருப்பாள் என்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு இந்த சூழ்நிலையை எப்படி கையாழ்வது என்பது பற்றி தெரியவில்லை… எனக்கு முன்னால் அவள் இன்னொருவருடன் வாழ்ந்திருப்பதை என் மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.. அதே சமயம், என்னால் இந்த திருமணத்தை நிறுத்தவும் முடியாது.. எனக்கும் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.. எனது மனநிலையை எப்படி மாற்றிக் கொள்வது என்று எனக்கு தீர்வு கூறுங்கள்…! இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பவில்லை..!

உங்களுக்கான தீர்வு : உங்களது நிச்சயதார்ததிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! நான் கூட உங்களது இடத்தில் இருந்தால் கொஞ்சம் தடுமாறி தான் போவேன்..! முதலில் உங்களுக்கு கிடைத்துள்ள தகவலின் உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். அடுத்து, நீங்கள் உங்களுக்காக முதலில் முடிவு எடுங்கள்.. உங்களது பெற்றோர்கள் முடிவு செய்துவிட்டார்கள், திருமணத்திற்கான ஏற்பாடுகள் பாதி முடிந்துவிட்டது என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டாம்..

உங்கள் மனது என்ன சொல்கிறது? அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு முழுமையான சம்மதமா என்பதை யோசிக்க வேண்டும். மற்றவர்களுக்காக திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.. அப்படி அவர் தான் வேண்டும் என்றால், அவரது கடந்த காலம் பற்றிய எந்த நினைவுகள் உங்களை தொல்லை செய்கிறது என்பதை சிந்தியுங்கள்.. கோபம் வருகிறதா? அவர் உங்களை ஏமாற்றி விட்டார் என்ற எண்ணம் வருகிறதா? பொறாமை உணர்வு இருக்கிறதா? என்ன விஷயம் உங்களை அதிகம் தொல்லை செய்கிறது என்று சிந்தித்து, இது பற்றி அவரிடம் தெளிவாக பேசுங்கள்.

பாதுகாப்பின்மை இது போன்ற விஷயங்களின் போது உங்களுக்கு, பாதுகாப்பின்மை மற்றும் பயம் போன்ற உணர்வுகள் வருவது இயல்பு தான்.. அந்த பயம் எது போன்றது என்பதை நீங்கள் தான் உணர வேண்டும். தேவையில்லாத எண்ணங்கள் மனதில் உண்டானால், அதை அப்படியே அவரிடத்தில் வெளிப்படுத்த வேண்டாம்.. நியாயமான மற்றும் வலுவான உங்களது மன அமைதியை குலைக்கும் விஷயங்களை பற்றி மட்டும் அவருடன் கலந்து தீர்வு காணும் விதமாக பேசுங்கள்…

கடந்த காலம் நீங்கள் அவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளதால், பழைய விஷயங்களை மீண்டும் மீண்டும் நியாபகப்படுத்த வேண்டாம்.. ஏதேனும் ஒரு கசப்பான அனுபவம் அல்லது ஏமாற்றத்தால் கூட அவர் தனது முந்தைய உறவில் இணையாமல் இருக்கலாம்.. இனி வரப்போகும் உறவாவது வாழ்க்கையில் மகிழ்ச்சியை தர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கும்.. அதனை சீர்குலைக்கும் விதமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டாம்..

மகிழ்ச்சியான வாழ்க்கை இது தான் உங்களது வாழ்க்கையின் தொடக்கம் என்பதால் நீங்கள் அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக அவருடன் பேச வேண்டியது அவசியமாகும். உங்களது சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்த பிறகு, உங்களது இல்லற பந்தத்தில் முழுமையாக இணையுங்கள்.. அதன் பிறகு அவரது கடந்த கால வாழ்க்கை குறித்து எக்காரணம் கொண்டும், அவருக்கு நினைவுபடுத்துமாறு நடந்து கொள்ளமால் இருப்பது சிறப்பு…!

உயர்வான எண்ணம் உங்களால் உங்களது துணைக்கு ஒரு மன நிறைவான வாழ்க்கையை கொடுக்க முடியும் என்று நம்புங்கள்.. நீங்கள் இருவரும் இணைந்து உங்கள் இருவருக்கும் பிடித்தமான விஷயங்களை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்.. உங்களை அவர் முழு மனதுடன் காதலிக்கிறார் என்பதில் உறுதியாக இருங்கள்..

சண்டைகள் உறவுகளில் சண்டைகள் வருவது இயல்பான ஒரு விஷயம் தான்.. மிக விரைவாக அந்த சண்டைகள் எல்லாம் காணாமல் போய்விடும். எனவே சண்டைகளின் போது கடந்த கால வாழ்க்கையை சுட்டிக் காட்டி பேச கூடாது. இது உங்களது துணையை காயப்படுத்துவதோடு, சண்டையை பெரிதாக்கிவிடும். எனவே வார்த்தைகளில் கவனம் தேவை…!

நம்பிக்கை அவசியம் உங்களது துணையின் கடந்த கால வாழ்க்கையை மையமாக கொண்டு அவர் மீது உள்ள நம்பிக்கையை நீங்கள் இழக்க வேண்டாம். அவருக்கு பிடித்தமான செயல்களை செய்ய அவர்களை அனுமதியுங்கள்.. ஒரு தவறு என்பது அறியாமையாலும், கடினமான சூழ்நிலையிலும் கூட நடந்திருக்கலாம்.. எனவே பொருமை அவசியம்..

சார்ந்திருப்பது ஒருவரை ஒருவர் சார்ந்து தான் இன்று அனைவருமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட, ஒருவரை முழுமையாக சார்ந்திருப்பது என்பது கூடாது.. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட ஆசைகள், இலட்சியங்கள், இலக்குகள் இருக்க வேண்டியது அவசியமாகும். ஒருவரை முழுமையாக சார்ந்திருக்கும் போது தான், அவர் இல்லை என்றால் என்ன செய்வது என்பது போன்ற பாதுகாப்பின்மை உணர்வுகள் தோன்றும்..!