Home பாலியல் எத்தனை வயதில் நாம் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம்

எத்தனை வயதில் நாம் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம்

17

download (4)Question:
எத்தனை வயதில் நாம் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம், எத்தனை வயதுவரை நாம் உறவில் ஈடுபட முடியும்? .

Answer:
எப்போது நாம் பூப்படைகிறோமோ அப்போதே நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக்கும் குழந்தை பெறுதலுக்கும் தயாராகத் தொடங்குகிறது.
எத்தனை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறவில் ஈடுபடத் தயாரோ அப்போதே அவர்கள் உறவில் ஈடுபடலாம்.
ஆனால் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம்.
அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
ஆகவே திருமணம்யாகியிருந்தாலும் கூட 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடைவதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு இல்லை.
எத்தனை வயதுவரை உங்களால் முடியுமோ அத்தனை வயதுவரை நீங்கள் உறவில் ஈடுபடமுடியும்.
ஆனாலும் இள வயதுப் பெண்களைப் போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சினைகள் அவர்களுக்கு உருவாகலாம்.
ஆகவே தங்கள் குடும்பத்திற்குரிய குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடும்பக் கட்டுப் பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.