Home சமையல் குறிப்புகள் உளுந்துவடை செய்வது எப்படி

உளுந்துவடை செய்வது எப்படி

22

Ulunthu-Vadaiஉளுந்து – 1கப் வெங்காயம் -1 பச்சைமிளகாய் -1 கறிவேப்பிலை -சிறிது இஞ்சி -1சிறுதுண்டு உப்பு -தேவையான அளவு எண்ணை -1கப்

உளுந்தை -1மணிநேரம் ஊறவைக்கவும். வெங்காயம்,கறிவேப்பிலை பொடியாக நறுக்கிவைக்கவும். இஞ்சியை தோல்நீக்கிவைக்கவும். உளுந்து ஊறியதும் கிரைண்டரில்(அ)மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.கடைசியில் பச்சைமிளகாய்,இஞ்சி,உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். அரைத்தமாவில் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு கலக்கவும். வாணலியில் எண்ணை ஊற்றி காய வைக்கவும். ஒரு கப்பில் சிறிது தண்ணீர் எடுத்துவைக்கவும். எண்ணை காய்ந்தவுடன் தண்ணீரில் கையை நனைத்துக்கொண்டு மாவை 4விரல்களில் சிறிது எடுத்து உருட்டி பெருவிரலால் நடுவில் ஓட்டை செய்து எண்ணையில் போடவும். ஒருபுறம் வெந்தவுடன் திருப்பிவிட்டு இரண்டுபக்கமும் வெந்தவுடன் எடுக்கவும். மொறுமொறுப்பான உளுந்துவடை ரெடி. உளுந்துமாவு கெட்டியாக இருக்கவேண்டும்.அப்பொழுதுதான் வடையில் எண்ணை அதிகமாக இருக்காது.கயை தண்ணீரில் நனைக்கும்பொழுது தண்ணிர் நிறைய கையில் ஒட்டிக்கொண்டு இருக்ககூடாது.அப்படி தண்ணீர் இருந்தால் எண்ணையில் போடும்பொழுது எண்ணை மேலே தெரித்துவிடும்.மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்க்குதான் கையை தண்ணீரில் நனைப்பது.