Home உறவு-காதல் உறவில் உங்களை அறியாமல் நீங்க செய்யும் தவறுகள்… என்றாவது இதை உணர்ந்ததுண்டா..?

உறவில் உங்களை அறியாமல் நீங்க செய்யும் தவறுகள்… என்றாவது இதை உணர்ந்ததுண்டா..?

45

உணவில் ஆரோக்கியம் என்று நம்மை அறியாமல் சில தவறுகள் செய்வோம், அது விஷதன்மையாக மாறும். அதே போல தான் நமது உறவிலும் நாம் ஆரோக்கியம் என்று செய்யும் சில விஷயங்கள் பின்னாளில் விஷத்தன்மையாக மாறலாம். சில சமயங்களில் உண்மை கசக்கும் எனில் அதை மறைக்கவும் தெரிய வேண்டும். சில சமயங்களில் அந்த கசப்பை அன்றே உட்கொண்டு, தீர்வை கொண்டு, இல்வாழ்க்கை பயணத்தை தொடரவும் தெரிந்திருக்க வேண்டும். தன் துணையை எடுத்தெறிந்து நடப்பதும் தவறும், தனது துணையை எல்லாவற்றுக்கும் எதிர்பார்த்து காத்திருப்பதும் தவறு. ஆகமொத்தத்தில் நீங்கள் ஆரோக்கியம் என நினைத்து உறவில் கொஞ்சம், கொஞ்சமாக நஞ்சு அதிகரிக்க செய்யும் விஷயங்கள் என்னென்ன… அதை பற்றிய ஒரு தொகுப்பு தான் இங்கே காணவுள்ளோம்…

ஆதியும், அந்தமும்! சிலர் என் துணை தான் எனக்கு எல்லாமுமே என்பார்கள். அவர்களையே முழுவதுமாக சார்ந்திருப்பார்கள். அனைத்தையும் டிஸ்கஸ் செய்து செய்வது தவறே இல்லை. ஆனால், அனைத்திற்கும் துணையை சார்ந்திருப்பது தான் தவறு. ஏதேனும் ஒரு தருணத்தில், சூழலில், இது உங்கள் உறவில் மந்தம் அல்லது கசப்பு ஏற்பட காரணமாக அமையலாம். எனவே, உங்கள் எல்லா செயல்களுக்கும் துணையை சார்ந்திருப்பதை முதலில் தவிர்த்து விடுங்கள்.

நொடிக்கு, நொடி! இந்த தவறை இப்போது அனைவரும் செய்கிறார்கள் என கூறிட முடியாது எனிலும், ஹவுஸ் வைப் செய்ய வாய்ப்புள்ளன. நமது அம்மா காலத்தில் இது அதிகமாகவே இருக்கும். ஆம்! தொட்டது தொன்னோருக்கும் துணையிடம் கேட்டுதான் செய்வார்கள். அவர்கள் வெளிவேலையில் என்ன பிசியாக இருக்கிறார்கள் என்ன எது என எதை பற்றியும் யோசிக்க மாட்டார்கள். கலந்தாலோசித்து செய்வதில் தவறல்ல, ஆனால், சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சுயமாக முடிவெடுக்க முடியவில்லை என்பது உங்கள் உறவில் ஒரு மைனசாக அமையலாம்.

உணர்வுகள்! உறவில் கணவன் – மனைவி வெளிபடுத்தும் எல்லா உணர்வுகளும் உண்மையாக இருக்க வேண்டும் என்றில்லை. சூழ்நிலை காரணமாக, சமாதானம் செய்ய வேண்டும், தங்கள் தவறை மறைக்க வேண்டும் என சில சமயம் போலியான உணர்வுகளும் வெளிப்படும். அப்படியான உணர்வு வெளிப்பாடுகள் மூலம் தற்காலிகமாக ஒரு பிரச்சனையை தவிர்த்துவிடலாமே தவிர, ஒருநாள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஒரு சிறிய புள்ளியல் பெரிய பூகம்பமாய் வெடிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, முடிந்த வரை போலியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டாம்.

பிளம்பர் அல்ல… உங்கள் துணை உங்கள் உணர்வு சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பிளம்பர் அல்ல. உறவில் கணவன் – மனைவி இருவருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகளும் இருக்கும், தனிதனியாக அவரவர்களை மட்டும் சார்ந்த சில பிரச்சனைகளும் இருக்கும். இதில், நான் சோகமாய் இருக்கிறேன், என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என நீங்கள் ஆதங்கத்தை கொட்டலாமே தவிர, அனைத்து உணர்வு சார்ந்த பிரச்சனைக்கும் உங்கள் துணையே தீர்வளிப்பார் என எதிர்பார்க்க வேண்டும். ஒரு நேரத்தில், உங்கள் துணையால் முடியவில்லை என்ற போது, அவர் மாறிவிட்டார் என நீங்களே தவறாக உணர துவங்குவீர்கள். இது உங்கள் உறவில் தேவையற்ற சந்தேகங்கள், பிரச்சனைகள் உண்டாக காரணியாக அமையும்.

மகிழ்ச்சி! தன் துணை வருந்தும் போது, அவர்களை மகிழ்விக்க வேண்டியது உங்கள் கடமை. ஆனால், அவரது மன வருத்தத்தின் ஆழத்தை அறிந்து நீங்கள் செயற்பட வேண்டும். ஏதும் அறியாமல், மறந்துவிடு, இதெல்லாம் ஒன்றுமில்லை என கூறி நீங்கள் நகைக்க செய்யும் போது, அவர்கள் இவனுக்கு நமது வருத்தம் பற்றியே தெரியவில்லை, நமது உணர்வுகளை மதிக்க தெரியாமல் இருக்கிறான் என கருத வாய்ப்புகள் உண்டு.

நேர்மை! உறவில் கணவன் – மனைவி நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம் தான். ஒருவேளை அந்த நேர்மையே உங்கள் உறவை பதம்பார்க்கும் எனில், அந்த நேர்மையை கொஞ்சம் தவ்ர்த்திக் கொள்ளலாம். அதற்கென துரோகம் செய்யலாம் என்பதல்ல இதன் பொருள். சின்ன, சின்ன உண்மைகள் உங்கள் துணையை பாதிக்கும் எனில், அதை மறைக்கலாம் அவ்வளவு தான்.

சாயம் பூசலாம்… உறவில் உண்மையை மறைக்க கூடாது, ஒளிவுமறைவு இன்றி இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், சில உண்மை கசக்கும் எனில், சில விஷயம் கசக்கும் எனில், அந்த கசப்பை போக்க இனிப்பு சாயம் பூசுவதில் தவறே இல்லை. இதை நன்கு அறிய வேண்டும்.

எல்லாமே இனிமையானது அல்ல… உறவில் எல்லாமே இனிமையாக அமைய வேண்டும் என்றில்லை… சில சமயங்களில் வருத்தத்தை தவிர்க்க முடியாது எனில், அதை அன்றே முழுவதுமாக வருந்தி முடித்துவிடுங்கள். சில சமயம் வருத்தத்தை சுமந்து கொண்டு செல்வதற்கு பதிலாக, அதை ஒரே நாளில் இறக்கி வைத்துவிட்டு, நிம்மதியாக வாழ்க்கை நடத்துவது சிறந்தது. இன்பமும், துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை, ஏற்றத்தாழ்வு இல்லாத வாழ்க்கை, இதயத்துடிப்பு இல்லாத உடலை போல.