Home பாலியல் உறவின்போதே ஆணுறை கிழிந்துவிட்டால்?… டென்ஷன் ஆகாம இத மட்டும் பண்ணுங்க…

உறவின்போதே ஆணுறை கிழிந்துவிட்டால்?… டென்ஷன் ஆகாம இத மட்டும் பண்ணுங்க…

31

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கவும், நோய்த் தொற்றுக்களில் இருந்து விடுபடவும் உடலுறவின் போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளவே ஆணுறை பயன்படுத்துகிறோம். இருப்பினும் சில சமயங்களில் உடலுறவின் போது ஆணுறை கிழிந்துவிடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இதனை பலர் உணர்ந்து இருப்பார்கள்.

இவ்வாறு உடலுறவின் போது ஆணுறை கிழிந்துவிட்டால் அந்த தருணத்தை எவ்வாறு எதிர்கொள்வது?

ஆணுறை ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியாக கிடைக்கிறது. ஆனால் ஆணுறையை ஆண்கள் பயன்படுத்துவது தான் இருவருக்குமே பாதுகாப்பான ஒரு தீர்வாக கருதப்படுகிறது.

எதிர்பாராத விதமாக ஆணுறை கிழிந்து பிறகு என்ன செய்வது என்று யோசிப்பதை விட அவ்வாறு நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயல்படுவது தான் சிறந்தது.

உங்களது ஆணுறுப்பின் அளவுக்கு பொருத்தமான ஆணுறையை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். எல்லா ஆணுறைகளும் ஒரே அளவில் இருப்பதில்லை. அவை பல சைஸ்களிலும் ஃபிளேவர்களிலும் கிடைக்கின்றன. இதில் உங்களுடைய ஆணுறுப்புக்குப் பொருத்தமானதை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது.

ஆணுறை வாங்கும் போது அதன் அளவு மற்றும் நண்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இவற்றின் தரங்களிலும் அளவுகளிலும் நிச்சயம் வேறுபாடு உண்டு.

நீங்கள் உடலுறவில் ஈடுபடும் போது ஏதேனும் மாற்றம் தெரிந்தால், உடனடியாக உடலுறவை நிறுத்திவிட்டு உங்களது ஆணுறையை சோதித்துப்பாருங்கள்.

நீங்கள் உடலுறவின் மீது உள்ள ஆர்வத்தில் இந்த விஷயத்தை கவனிக்காமல் இருப்பது முற்றிலும் தவறு.

ஆணுறையில் உள்ள விரிசலை கண்டிபிடிக்கப்பட்டால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது, பாத்ரூமுக்குச் சென்று நன்றாக ‘புஷ்’ செய்து விந்தணுக்களை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டும்.

விந்தணு வெளியேறவில்லை என்றால் சில தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் நன்றாக புஷ் செய்து பின்னர், பெண்ணுறுப்பை சுத்தமான நீரால் கழுவி விட வேண்டும்.