Home சமையல் குறிப்புகள் உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட்

உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட்

14

4b3a8738-5044-45f9-b9ae-041bb04c5979_S_secvpfதேவையான பொருட்கள்

:

உருளைக்கிழங்கு – 2

பெரியது

முட்டை – 3

பெரிய வெங்காயம்- 1

உப்பு – சுவைக்கு

மிளகுத்தூள் – 1 ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

* உருளைக்கிழங்கு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கிளறவும். உருளைக்கிழங்கு

பாதி வெந்ததும் வெங்காயத்தை சேர்த்து கிளறவும். பின்னர் அதில் மிளகுத்தூள் சேர்க்கவும்.

* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

* உருளைக்கிழங்கு நன்கு பொரிந்ததும் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி உருளைக்கிழங்கின் மேல் நன்றாக

பரத்தி விடவும்.

* பின் இதனை மூடி மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெந்ததும் திருப்பி போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் எடுத்து

பரிமாறவும்.

* உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட் ரெடி.