Home சமையல் குறிப்புகள் உருளைக்கிழங்கு பொடி சாதம்

உருளைக்கிழங்கு பொடி சாதம்

23

4eb83abe-f7b3-42a2-9bcd-1e2eb2e9d020_S_secvpf.gifதேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 2
சாதம் 1 கப் (உதிரியாக வடித்தது)
உப்பு – சுவைக்கு

வறுத்து பொடிக்க :

காய்ந்த மிளகாய் – 3
தனியா – 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்

தாளிக்க :

கடுகு
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
உளுத்தம்பருப்பு
கறிவேப்பிலை

செய்முறை :

* வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.

* உருளைக்கிழங்கு நன்றாக வெந்தவுடன் அடுத்து அதில் வறுத்து பொடித்த பொடி, உப்பு போட்டு சிறிது கிளறி சாதத்தை போட்டு மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் மூடி வைத்து கிளறி இறக்கவும்.

* சுவையான உருளைக்கிழங்கு பொடி சாதம் ரெடி.