Home ஆரோக்கியம் பொது மருத்துவம் உடல் துர்நாற்றத்தைத் தடுக்க

உடல் துர்நாற்றத்தைத் தடுக்க

14

download (16)இயற்கை வழிகள்

பெரும்பாலும் கோடையில் வியர்வையானது அதிகம் வெளியேறும். ஆகவே பலர் அந்த துர்நாற்றத்தைத் தடுக்க டால்கம் பவுடர், டியோட்ரண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும் சில சமயங்களில், அந்த பொருட்களை உபயோகிப்பதற்கு பின்னும் துர்நாற்றம் வெளியேறுகிறது. இதனால் பலர் தன்னம்பிக்கை இழந்துவிடுகின்றனர். இத்தகைய வியர்வை நாற்றம் வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஹார்மோன்களின் மாற்றங்கள், உண்ணும் உணவுகள் மற்றும் காலநிலை போன்றவை முக்கியமானவை.

வியர்ப்பது என்பது ஒரு இயற்கை செயல் என்பதால், அதனை நிறுத்த முடியாது. வியர்வை வெளியேறாமல் இருந்தாலும், அது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சொல்லப்போனால் வியர்வை துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. உடலில் உள்ள பாக்டீரியாக்கள் தான் அத்தகைய துர்நாற்றத்தை ஏற்படுத்துவின்றன.

எனவே இத்தகைய வியர்வையினால் ஏற்படும் நாற்றத்தைப் போக்குவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. இவற்றை பின்பற்றி வந்தால் நிச்சயம், உடலில் இருந்து வெளியேறும் வியர்வை துர்நாற்றத்தை எளிதில் போக்கலாம்.

சோப்பு
வியர்வை துர்நாற்றத்தைப் போக்குவதற்கு சிறந்த வழியென்றால், துர்நாற்றம் வரும் இடங்களை சோப்பு பயன்படுத்தி, நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வியர்க்கும் போது வெளிவரும் நீர் பாக்டீரியாவுடன் சேர்ந்து ஏற்படுத்தும் நாற்றத்தைப் போக்கலாம்.

சுத்தமான ஆடைகள்
தினமும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். அதிகமான அளவில் வியர்த்தால், அவர்கள் காட்டன் ஆடைகளை அணிவது சிறந்தது. ஏனெனில் காட்டன் வியர்வையை எளிதில் உறிஞ்சி, அதிலிருந்து வெளியேறும் நாற்றத்தை விரைவில் வெளியேற்றிவிடும்.

தேன்
குளித்து முடித்த பின், ஒரு டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இறுதியில் உடலில் ஊற்றிக் கொண்டால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

அருகம்புல் சாறு
தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை பருகி வந்தால், அதில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கிவிடும்.

பேக்கிங் சோடா
குளித்த பின், சிறிது பேக்கிங் சோடாவை அக்குளில் தெளித்துக் கொண்டால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.

வெள்ளை வினிகர்
குளிக்கும் போது, வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு அக்குளை கழுவினால், உடல் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ரோஸ் வாட்டர்
உடல் துர்நற்றத்தைப் போக்குவதில் ஒரு சிறந்த வழியென்றால், அது ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது தான். அதிலும் குளிக்கும் நீரில், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொண்டு குளித்தால், உடலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

ஆப்பிள் சீடர்
வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை குளிக்கும் போது, இறுதியில் ஒரு கப் நீரில் கலந்து, அக்குளைக் கழுவினால், அவை சருமத்தில் உள்ள பாக்டீரியாவை அழிப்பதோடு, அதிகப்படியான வியர்வையையும் தடுக்கும்.

தக்காளி சாறு
தக்காளி சாறும் உடல் துர்நாற்றத்தை தடுக்கும். அதற்கு ஒரு கப் தக்காளி சாற்றினை குளிக்கும் தொட்டியில் ஊற்றி, அதில் நீரை நிரப்பி, அதனுள் 15 நிமிடம் உட்கார்ந்தால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு
8 டம்ளர் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடைக் கலந்து, ஒரு நாளைக்கு பல முறை துர்நாற்றம் வரும் இடத்தில் ஊற்றிக் கழுவி வந்தால், வியர்வையானது கட்டுப்படுவதோடு, துர்நாற்றமும் நீங்கும்.

புதினா
குளிக்கும் நீரில் சிறிது புதினா இலையை சேர்த்து ஊற வைத்து, குளித்து வந்தால், உடலில் உள்ள கிருமிகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.