Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் எடையைக் கூட்ட…

உடல் எடையைக் கூட்ட…

18

கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்டுவதற்கான உணவுப் பழக்கம் (குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைப் பிடிக்க வேண்டும்). * அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். * பாஸ்ட் ஃபுட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. * வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், ஒருவித கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான்! * உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம். * மூன்று இட்லி, சர்க்கரை கலக்காத வாழைப்பழ மில்க்ஷேக். * எண்ணெய் குறைவாக மூன்று தோசை, சர்க்கரை இல்லாத சப்போட்டா மில்க் ஷேக். * ரவா அல்லது சேமியா உப்புமா, சர்க்கரை இல்லாத ஃபைன் ஆப்பிள் ஜூஸ். * ஒரு கைப்பிடி உலர் பழங்கள் (அ) ஒரு கப் தயிர் (அ) அவித்த சோளம் (அ) கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம். * மதிய உணவுக்கு மூன்று கரண்டி சாதம், சாம்பார், தயிர், மிக மிகக் குறைவான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு. * இனிப்பான பிரெட் (அ) சர்க்கரை இல்லாத மில்க்ஷேக் (அ) பால், முட்டை கலந்த ஃப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சாயங்கால ஸ்நாக்ஸ் ஆக உட்கொள்ளலாம். * இரவு உணவுக்கு முன்னர் காய்கறி அல்லது சிக்கன் சூப் குடிக்கலாம். நான்கு சப்பாத்தி, காய்கறி குருமா, தயிர் (அ) குறைவான தேங்காய் இல்லாத குருமாவுடன் நான்கு ஆப்பம். அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது!